முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 5, 2015

கீழக்கரை நகராட்சியில் கூடுதல் கொசு மருந்து இயந்திரங்கள்

No comments :
டெங்கு, மலேரிய போன்ற கொசு மூலம் பரவும் நோய்களை தடுக்கும் நடவடிக்கைகளில் கீழக்கரை நகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இதன் அடிப்படையில், கூடுதல் கொசு மருந்து இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இன்று அது பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.




நகராட்சி தலைவி, திருமதி.ராப்பியத்துல் காதிரியா, அவரது கணவர் திரு.ரிஸ்வான், மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பங்குபெர்ற்றனர்.

படம்: கீழக்கரை டைம்ஸ்

பள்ளிக்கு மாணவர்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது -தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன்

No comments :
"பள்ளி மாணவ-மாணவிகள் தமது வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வீட்டிற்கு செல்லும்போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


"பள்ளி மாணவ-மாணவிகள் தமது வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வீட்டிற்கு செல்லும்போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

1. பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வருவது, ‘செல்போன்போன்ற உபகரணங்களை எடுத்து வருவது கூடாது.

2. வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் போது தனியாக வருவதை தவிர்த்து, பள்ளி மாணவ-மாணவிகளுடன் குழுவாக இணைந்து வர வேண்டும்.
3. பள்ளிக்கு வரும் வழியில் நீர் நிலைகள் ஏதேனும் இருப்பின் அதன் அருகில் செல்லக்கூடாது.

4. ரயில்வே தண்டவாளங்கள், நெடுஞ்சாலைகள் இருப்பின் கவனமாக எச்சரிக்கையுடன் அதனை கடக்க வேண்டும்.

5. ரயில்கள், பஸ்களில் பயணம் செய்யும்போது படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யக்கூடாது.

6. பள்ளிக்கூடத்திற்கு வரும்போதும், வீட்டுக்குச் செல்லும்போதும், எந்த நேரத்திலும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவது, அவர்கள் தரும் மிட்டாய், உணவு பொருட்களை வாங்கக்கூடாது. வாங்கி சாப்பிடக்கூடாது.

7. பள்ளிக்கூடத்தில் படிக்கும் சக மாணவ, மாணவியர்கள் அல்லது பிற பள்ளி மாணவ, மாணவிகளுடன் வாக்குவாதம், சண்டை, சச்சரவுகள் கேலி கிண்டல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

8. பெற்றோரிடம் தெரிவிக்காமல் பள்ளிக்கூட நேரம் முடிந்த பின்னர் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்கள் வீடு, சினிமா காட்சி போன்ற வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது.


மேற்குறித்த, அறிவுரைகளை பள்ளிக்கூட தலைமையாசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தின்போது மாணவர்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறி உள்ளார்

என்னை அறிந்தால் - தமிழ்

No comments :
தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அஜித் மூன்றாவது வெற்றிபடமாக கொடுத்திருக்கும் படம் தான் என்னை அறிந்தால். நேர்மையான ஒவ்வொரு போலீஸ் அதிகாரிகளுக்கும் பின்னால் ஒரு பிளாஷ்பேக் கதை இருக்கும் அப்படித்தான் இந்த படத்தில் அஜித்தும்,
ஆரம்பபே ஆகாயத்தில் அறிமுகம் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் சத்யதேவ்(அஜித்) அருகில் அமர்கிறார் தேன்மொழி(அனுஷ்கா). விமான பயணத்தை கண்டு பயந்து நடுங்கும் அனுஷ்கா துளிகூட பயம் இல்லாமல் அருகில் இருக்கும் தல அஜித்தை பார்க்கிறார். இவர்களது பயணம் நீண்ட தூரம் என்பதால் (அமெரிக்கா டு இந்தியா) இருவரும் ஒருவரையொருவர் அறிமுகபடுத்திக்கொள்கின்றனர்.
இந்தியா வந்தடையும் போது தேன்மொழிக்கு சத்யதேவ் மீது காதல், அவர்களது அடுத்த சந்திப்பில் தன் காதலை சொல்ல வருகையில் மர்ம நபர்களால் தாக்கப்படுகிறார்கள். அவர்களிடம் இருந்து தேன்மொழியை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். அவர்கள் ஏன் தாக்கினர், அதன் நோக்கம் என்ன என்பதை தேன்மொழி கேட்க ரீவைண்ட்……….
அங்க தான் நம்ம சின்ன தல அஜித்த பாக்குறோம், 12 வயதில் தன் தந்தையை இழந்த சத்யதேவ் எந்த பாதையில் செல்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார். பின்னர் ரகசிய போலீஸாக இருக்கும் அஜித்துக்கு விக்டர் (அருண்விஜய்) என்ற ரவுடி கும்பலை சேர்ந்தவரிடம் அறிமுகம் ஏற்படுகிறது, நாளடைவில் அது நட்பாக மாறுகிறது. ஆனால் தனது குறிகோளில் குறியாக இருக்கும் சத்யதேவ் அந்த ரவுடி கும்பலை போட்டுத்தள்ளுகிறார், விக்டர் மட்டும் தப்பிக்கிறார்.
இந்த எண்கவுண்டருக்கு பிறகு சத்யதேவ் சிறந்த போலீஸ் அதிகாரியாக மாறுகிறார், அப்போது தான் ஹேமாலினி(த்ரிஷா) என்ற பெண்னை பார்கிறார், பார்த்ததும் காதலில் விழுகிறார் சத்யதேவ். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது கணவர் இறந்துவிட்டார். நான்கு வருடங்களாக உயிருக்கு உயிராக காதலிக்கும் இவர்கள் காதலை திருமணமாக்க முடிவுசெய்கின்றனர்.
அங்கதான் விக்டர் ஆப்பு வைக்கிறார் ஹேமாலினியை போட்டுதள்ளுகிறார், திரும்ப எண்கவுண்டர் அவதாரம் எடுக்க நினைக்கும் சத்யதேவ் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு போலீஸ் வேலையில் இருந்து விழகி வாழ்ந்துவருகிறார். தன் குழந்தை கடத்தப்பட்டதையும், அதை கண்டுபிடிக்க உதவுவாறு நண்பர் கேட்க உதவமுன்வரும் சத்யதேவ் அதிர்ச்சியடைகிறார் காரணம் விக்டர் தான் இதை செய்தது.
அஜித் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அருண்விஜய்யை பிடித்தாரா…இல்லை தனது பகையை தீர்த்துகொண்டாரா…தேன்மொழியின் காதல் நிறைவேறியதா…அந்த குழந்தையின் நிலைமை என்ன ஆனது என்பது மீதிக்கதை.
வழக்கமான அஜித் படத்தில் இருந்து இந்த படம் சற்று வித்தியாசமானது என்று தான் சொல்ல வேண்டும், மாஸ் ஹீரோ என்பதை எல்லாம் தாண்டி இந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி, யதார்தமான காதலன், அன்பான அப்பா என அஜித் அசத்தியிருக்கிறார்.
அனுஷ்கா, த்ரிஷா இவர்கள் இருவருக்கும் தான் படத்தில் அட்டகாசமான கதாபாத்திரம் அதிலும் த்ரிஷா வெளுத்துகட்டுகிறார் நடிப்பில், விவேக் நாலைந்து பஞ்சுகளை பறக்கவிட்டிருக்கிறார்.
ஆர்யாவிற்கு எப்படி ஆரம்பம் ஒரு மறக்கமுடியாத படமோ, அப்படித்தான் அருண்விஜய்க்கு இந்த படம். அஜித்துடன் நட்பு பாராட்டும் போதும் சரி, அவரே தன் தலைவனை போட்டு தள்ளிய அஜித்தை போட்டுத்தள்ள துடிக்கும் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டுகிறார்.
ஹாரிஸ் ஜெய்ராஜ் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது, பின்னனி இசை படத்திற்கு பலம் என்றாலும் அஜித்துக்குறிய மாஸ் இசை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து படங்களும் செம ஸ்டைலிஸ் கலந்த கிளாஸ் படமாக இருக்கும் என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார். என்ன இது ஒரு கௌதம் மேனன் படம் என்று சொல்லும்படியாக தான் இருக்கிறதே தவிர இது தல படம் என்று சொல்லும்விதமாக இல்லை. முதல் பாதி சற்று மெதுவாக நகர்கிறது, இரண்டாம் பாதி சீறுகிறது.
மொத்தத்தில் (என்)னை அறிந்தால் உங்களுக்கு பிடிக்கும்.

நன்றி: நாளைய சினிமா.

அறக்கட்டளை நடத்தி பொதுமக்களிடம் மோசடி

No comments :
ராமநாதபுரம், : கடலாடி அருகே அறக்கட்டளை நடத்தி பொதுமக்களிடம் ரூ.2 கோடி மோசடி செய்தவரை ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா நரிப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது உபைஸ். இவர் ஹிஸ்புல்லா இளைஞர் சங்கம் மற்றும் நரிப்பையூர் முன்னேற்ற அறக்கட்டளை என்ற பெயரில் இரு தொண்டு நிறுவனங்களை நடத்தி வந்தார். ஏழைகளுக்கு வட்டியில்லாத நகைக் கடன் வழங்குதல், லாபத்துடன் கூடிய மாதாந்திர சீட்டுத் திட்டம், வெளிநாட்டுப் பண பரிமாற்றம், பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான சிறு சேமிப்புத் திட்டம் போன்றவற்றை நடத்தினார். இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பண முதலீடு செய்ததுடன், நகைக்கடனும் பெற்றனர். இந்நிலையில் அப்பகுதிமக்களிடம் இருந்து பெற்ற பணம் மற்றும் நகைகளுடன் முகமது உபைஸ் திடீரென தலைமறைவானார்.



இதனையடுத்து கடந்த 2ம் தேதி தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் அகமது தலைமையில், முஸ்லிம் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் எஸ்பி மயில்வாகனனிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் முகமது உபைஸ், 250க்கும் மேற்பட்டோரிடம் 5 கிலோ அளவிலான தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கம் என ரூ.2கோடி வரை மோசடி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து, தங்களது பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர். இதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க எஸ்பி உத்தரவிட்டிருந்தார். நரிப்பையூரைச் சேர்ந்த யாகூப் மனைவி பரீதா பீவி புகாரின்பேரில், நேற்று முகமது உபைஸ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

பரீதா பீவி தனது புகாரில், முகமது உபைஸிடம் 51 பவுன் தங்க நகைகளை வைத்து ரூ.4 லட்சம் நகைக்கடன் பெற்றிருந்தேன். பணத்தை திருப்பிச் செலுத்தி நகையை மீட்கச் சென்றபோது, முகமது உபைஸ் தலைமறைவாகிவிட்டார். எனவே தனது நகையை மீட்டுத்தரவேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். இதேபோல் மேலும் 60 பேரிடம் முகமது உபைஸ் மோசடி செய்துள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


செய்தி: தினகரன்

இசை - தமிழ்

No comments :
தன்னோட வெற்றியை தக்க வச்சுக்க தன்னையே இழக்கவும் தயாரா இருக்கான் மனுஷன் என்ற ஒருவரியை மையமாகக் கொண்ட இசை திரைப்படம். இளையராஜா இப்படி மையக்கருவுடன் ஒரு படம் வருவதையே விரும்பவில்லை. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க மறுத்துவிட்டார். பிரகாஷ் ராஜ் கதை கேட்டுவிட்டு நடிக்க மறுத்து ஒதுங்கிக் கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் படம்.தமிழகத்தின் இருபெரும் இசையமைப்பாளர்கள் பற்றிய கதை. அல்டிமேட் மியூசிக் த்ரிலலர் என்றெல்லாம் பெரிய பில்டப்களுடன் சேர்ந்திசைத்து ஒலித்திருக்கிறது இந்த இசை. கதை,திரைக்கதை, இயக்கத்துடன் இசையும் எஸ்.ஜே.சூர்யா தான்.நடித்து தொலைத்திருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.அஜீத்,விஜயை வைத்து கொடுத்த ஹிட்ஸ் நினைவுக்கு வருவதால்.



மியூசிக் த்ரில்லர் படங்கள் தமிழில் புதிதில்லை என்றாலும் இசை கதைக்களன் கொஞ்சம் மாறுபட்டது. எஸ்.ஜே.சூர்யாவின் படம் என்றால் அனுமானிக்கக் கூடிய கொஞ்சம் சதை+ கொஞ்சம் கதை பாணிதான் என்றாலும் மூன்று மணிநேர பத்து நிமிஷ படம் என்பது பெரும் வாதை .. பெரும் பாரத்தை சத்யராஜின் வில்லத்தனம் சுமந்து பயணிப்பது 'இசை'யின் பலம். லொள்ளுத்தனங்கள் இல்லாத வில்லத்தன சத்யராஜ் அசத்தியிருக்கிறார். நாயகி சாவித்ரி என அறிமுகம் போடுகிறார்கள்.ஒரிசாவில் டிவி சீரியலில் நடித்தவராம்.எஸ்.ஜே. சூர்யா படத்தில் நடிப்பதற்கான அத்தனை தகுதிகளையும் 'குறைவற'ப் பெற்றிருக்கிறார். சத்யராஜ் காட்சிகள் தவிர்த்த முதல் ஒரு மணிநேர படத்தை ஈவிரமிக்கமின்றி ஃபார்வேர்டு செய்துவிட்டு பார்த்தால் இசை இதம் தான். மருத்துவமனையில் நாயகியிடம் சூர்யா பேசும் ஒரு ஐந்து நிமிட வசனம் அதற்கு முன் காட்டப்பட்ட அத்தனை ஜில்பான்ஸ் காட்சிகளையும் துடைத்தெறிந்து விடுகிறது. கஞ்சா கருப்பு , தம்பி ராமையா யாவரும் அடக்கி வாசித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். லொகேஷன்கள் , பாடல்கள் ,படத்தின் இரண்டாம் பகுதி ஆஹா ரகம் என்றாலும்.......
கிளைமாக்ஸ்க்குப் பின்னதான ஒரு ட்விஸ்ட் - அதை ரசிக்க முடிந்தால் சந்தேகமின்றி இது ஒரு வெற்றிப் படம்.
கொஞ்சம் ம்,சை ! கொஞ்சம் இம்சை , கொஞ்சம் இசை ! 

விமர்ச்கர்: திரு.ஷேக் ஷாஜஹான், சவூதி அரேபியா