முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 3, 2015

குவைத்தில், SDPI கட்சி தலைவர் மவ்லவீ K.K.S.M. தெஹ்லான் பாகவீ அவர்கள் பங்கேற்கும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!

No comments :

இரவு நேரங்களில் பஸ்கள் மண்டபம் நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

No comments :
மண்டபம், : இரவு நேரங்களில் பஸ்கள் மண்டபம் நகருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது. மண்டபம் நகர் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொருளாளர் பிர்தவ்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன், மாவட்ட அமைப்பாளர் பக்கீர் ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 



நகர் தலைவராக நசீர், செயலாளராக ஹாரீஸ் கான், பொருளாளராக ராஜா முகமது, துணைத்தலைவராக ஜெய்னுல் ஆப்தீன், துணைச் செயலாளராக மீஸ்ரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  இந்த கூட்டத்தில் மண்டபம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் இரவு நேரங்களில் வந்து செல்ல வேண்டும்; மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


ராமநாதபுரத்தில் டேஸ்ட் ஆப் மும்பை

No comments :
ராமநாதபுரத்தில் டேஸ்ட் ஆப் மும்பை ஹாஜி அலி ஜூஸ் நிறுவனத்தை திரைப்பட இயக்குநர் அமீர் திறந்து வைத்தார். துபாய், அபுதாபி, ஷார்ஜா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும், இந்தியாவில் மும்பை, பெங்களுரூ, சென்னை போன்ற நகரங்களிலும் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்று திகழும் டேஸ்ட் ஆப் மும்பை என அழைக்கப்படும் ஹாஜி அலி ஜூஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா ராமநாதபுரம் பாரதிநகரில் நேற்று நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் ஜூஸ் நிறுவனத்தை திறந்து வைத்தார்.

நிறுவன பங்குதாரர்கள் முஷம்மில் ஹூசைன், இஸ்திகார் வரவேற்றனர்.  சிறப்பு விருந்தினர்களாக வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், சக்கரக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் நூர்முகம்மது, கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குநர் ஹபீப் முகம்மது, தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, ஏசியன் கிளாஸ் ஹவுஸ் உரிமையாளர் முஜிபுர் ரஹ்மான் அன்ட் பிரதர்ஸ், பிங் பாந்தர்ஸ் நிறுவன பங்குதாரர்கள், நியூ ஹாரா ஏஜென்சீஸ் நிறுவனர் நூகு அப்துல்காதர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  
இதுகுறித்து ஹாஜி அலி நிறுவனத்தின் பங்குதாரர் முஷம்மில் கூறுகையில், மக்களுக்கு இயற்கை உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம் என்றார். 

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அரசு களவிளம்பரத்துறை கல்லூரி நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பாக, பிரதமரின் மக்கள் நிதி திட்டம், தூய்மையான பாரதம் மற்றும் பெண் சிசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அபுல்ஹசன்சாதலி தலைமை வகித்தார். சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப், இயக்குநர் ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி ராமசந்திரன்,மாவட்ட சமூக நல அலுவலர் மலையரசி, கள விளம்பர அலுவலர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஆனந்த் வரவேற்றார்.

முகவை மாவட்டம் - வரலாறு

2 comments :
பனிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த சமஸ்தானத்தைஏர்வாடியை சேர்ந்த ஹஸ்ரத் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷாஹீது என்பவர் ஆண்டார். பின்னர் அவரின் வழியினர் சேதுபதி மன்னருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டு இராமநாதபுரம் சமஸ்தானத்தைஆண்டனர். அன்று முதல் பதினைந்தாம் நூற்றண்டின் முற்பகுதி வரை திருவாடனை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய தாலுக்காக்களை உள்ளடக்கிய தற்போதைய ராமநாதபுரம் மாவட்டதை சேதுபதி மன்னர்கள் ஆண்டுவந்தனர். 1063இல் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தன் ஆளுமையில் கிழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.
1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த ராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில், குடும்ப சச்சரவின் காரணமாக தஞ்சாவூர் மன்னரின் உதவியோடு 1730ஆம் ஆண்டில் பெரிய உடையார் தேவர் சேதுபதி வம்சத்தில் மண உறவை ஏற்படுத்திக்கொண்டு சிவகங்கையின் மன்னரானார். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி பாளையக்காரர்கள் சுதந்திர மன்னர்கள் ஆனார்கள், இதில் ராமநாதபுர சேதுபதி மன்னரும், சிவகங்கை மன்னரும் முக்கியமானவர்கள். 1730இல் கர்நாடகத்தைச் சேர்ந்த சந்தா சாஹிப் ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் மராத்தியர்களின் கீழும் பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் முக்கியஸ்த்தர்கள் கலகத்தில் இடுபட்டனர். அந்த நேரத்தில், கர்நாடக அரியாசனத்தில் சந்தா சாஹிப் மற்றும் முஹம்மது அலி ஆகிய இருவர் இருந்தனர், மற்றும் இந்த மாவட்டம் கர்நாடகத்தின் பகுதியாக இருந்தது.பிரித்தானியர்கள் சந்தா சாஹிப்பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இது தென்பகுதிகளில் தொடர் முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது.
1795இல் பிரித்தானியர்கள் முத்துராமலிங்க சேதுபதியை விழ்த்தி ராமநாதபுர அதிகாரத்தை கைப்பற்றினர். 1801இல் மங்களேஸ்வரி நாச்சியார் சிவகங்கையின் ஜமீன் ஆக்கப்பட்டார். ராணி வேலு நாச்சியாரின் மறைவுக்கு பின்னர் மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி அதிகாரத்தில் இருந்தனர். 1803இல் சிவகங்கையை சேர்ந்த மருது பாண்டியர்கள் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த கட்டபொம்மனுடன் இணைந்து பிரித்தானியர்களுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரி வல்லபா பெரிய உடைய தேவரை சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். திப்பு சுல்தானின் விழ்ச்சிக்கு பின் பிரித்தானியர்கள் அதிகாரத்தை கைப்பற்றி நவாப்பை சிறையிட்டனர். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.
1910இல் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் ராம்நாடு என வழங்கப்பட்டது; இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய ராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.