(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, December 9, 2015

ராமநாதபுரம் அண்ணாநகரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் போடப்பட்ட சிமெண்ட் சாலை முற்றிலுமாக பழுது!!

No comments :
ராமநாதபுரம் அண்ணாநகர் குட்செட் காலனியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் போடப்பட்ட சிமெண்ட் சாலை முற்றிலுமாக பழுதடைந்து விட்டதாக அப்பகுதி மக்கள் ஆட்சியர் க.நந்தகுமாரை திங்கள்கிழமை சந்தித்து புகார் அளித்தனர்.

ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாநகரில் வசிப்போர், கௌரிநாதன் என்பவரது தலைமையில் ஆட்சியரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:


அண்ணாநகர் ரயில்வே குட்செட் தெருவில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் வழிந்தோட வழியின்றி அப்பகுதிகளில் தேங்கி நின்று கொசுக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்கள் என பலரும் காய்ச்சல் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். சாலைகள் பழுதாகி குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

குட்செட் தெருவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் போடப்பட்ட சாலை முழுவதுமாக பழுதாகி விட்டது. பாதாளச் சாக்கடை வசதியும் இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இது குறித்து கடந்த 4 ஆண்டுகளாக நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சாலை வசதியும், சாக்கடை வசதியும் செய்து தருமாறு அதில் தெரிவித்துள்ளனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment