(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 10, 2015

ராமநாதபுரம் மாவட்ட ஈர நெஞ்சங்கள் - குவிந்து வரும் வெள்ள நிவாரணப் பொருட்கள்!!

No comments :
சென்னை,கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமானோர் கொடுத்த நிவாரணப் பொருட்கள் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் குவிந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவின்பேரில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை திருமண மண்டபத்தில் வெள்ள நிவாரணத்துக்காக வழங்கப்படும் பொருள்கள் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவித்திருந்தனர்.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பழனி கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன என்றார் அவர்.

ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக் மற்றும் நேஷனல் அகாதெமி ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான நாசாவின் சார்பில் ரூ.15லட்சம் மதிப்புள்ள பொருள்களும், ராமநாதபுரம் டி.டி.வி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நண்பர்கள் அமைப்பின் சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருள்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மானாமதுரை:மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லியம்மன், சோமநாதர் சுவாமி கோயில் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருள்கள் கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.

செய்தி: தினசரிகள்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment