Monday, December 28, 2015
ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா நடைபெற்றது!!
ராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அமரர் த. குழந்தைச் செட்டியார்
விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் ஆயிர வைசிய மகாஜன சபை திருமண மண்டபத்தில் நடந்த
இந்த விழாவுக்கு,
மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர் ராஜா தலைமை
வகித்தார்.
சங்கத்தின் தலைவர் மை. அப்துல்சலாம், துணைத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மற்றொரு துணைத் தலைவர் குழ. விவேகானந்தன் வரவேற்றுப் பேசினார். விழாவை
அறிமுகம் செய்து சங்கச் செயலர் டாக்டர் பொ. சந்திரசேகரன் பேசினார். அமரர்
குழந்தைச் செட்டியாரின் உருவப்படத்தை பா. ரெத்தினம் செட்டியார் திறந்து வைத்தார்.
நினைவும், கனிவும் என்ற தலைப்பில்
சங்க உறுப்பினர் சீ. நாராயணன் பேசினார். கவிஞர்கள் மானுடப்பிரியன், கருணாகரன்,
நா.வேலுச்சாமிதுரை ஆகியோர் கவிதாஞ்சலி செலுத்தினர்.
விழாவில், பல்வேறு துறைகளில்
சாதனைபுரிந்த
ஆ.வே. ராஜேந்திரன் (ஆசிரியப் பணி),
மு. காந்தி (ஆன்மிகப் பணி),
சு. முபாரக் அலி (இசைப் பணி),
சா.ஜா.பொ. பாண்டியன் (கல்வி மற்றும் தமிழ்ப் பணி),
செ.ந. மகாதேவன் (வணிகப் பணி),
டாக்டர் இ. மன்சூர் (மருத்துவப் பணி),
ராமலிங்கா அன்பு இல்லம் (சமுதாயப் பணி) ஆகியோருக்கு
சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தைச் செட்டியார் விருதை, வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. வழங்கிப் பேசினார்.
இதில், ஆயிர வைசிய மகாஜன சபையின்
தலைவர் எம்.எஸ். கேசவன்,
திருக்குறள் பேரவையின் தலைவர் ஆ. வேணுகோபாலன், கவிஞர் மாணிக்கவாசகம் உள்பட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment