Thursday, December 31, 2015
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதம் இலவச கண் சிகிச்சை முகாம்கள்!!
ராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம்
சார்பில் ஜனவரி மாதம் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடைபெறும் ஊர்கள் மற்றும் நாள்
பற்றி மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு வருமாறு: முகாம் நடைபெறும் கிராமங்கள்: (தேதி
அடைப்புக் குறிக்குள்)
கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி (3.1.2016),
முத்துப்பேட்டை இந்திரா நகர் சமுதாயக் கூடம் (6.1.2016), ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம்(11.1.2016),
தேவிப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (12.1.2016),
ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (20.1.2016),
ஆர்.எஸ்.மங்கலம் மதார்ஸா பள்ளிவாசல் வளாகம் (21.1.2016), உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (22.1.2016),
முதுகுளத்தூர் எஸ்.கே.திருமண மண்டபம் (23.1.2016),
எஸ்.பி.பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும்
முதுகுளத்தூர் அரசு தாலுகா மருத்துவமனை (27.1.2016),
கமுதி அரசு மருத்துவமனை (28.1.2016),
எமனேசுவரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (29.1.2016).
இம்முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு கண் தொடர்புடைய
நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெற்று பயன்பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment