(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 29, 2015

பேருந்து வசதி கேட்டு மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு!!

No comments :
ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதி பள்ளிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி அலிஅக்பர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நந்தகுமார் வழங்கினார். அப்போது அங்கு வந்த பெரியபட்டிணம் ஊராட்சி தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கிராம தலைவர் ஆறுமுகம் தலைமையில் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 




இதுகுறித்து பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் கூறியதாவது:- பெரியபட்டினம் தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நாங்கள் கடற்கரை பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த சுமார் 120 மாணவ-மாணவிகள் பெரியபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். 

எங்கள் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கூடத்திற்கு நாள்தோறும் நடந்து சென்று வருகிறோம். தினமும் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே, காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளிக்கூடம் சென்று வரும் வகையில் பஸ்வசதி செய்து தர வேண்டும்.

இதுதொடர்பாக பெரியபட்டினம் ஊராட்சி சார்பில் தலைவர் கபீர் மூலம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, எங்களின் அவசிய தேவையை கருத்தில் கொண்டு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பஸ் இயக்கப்படும் என்று கலெக்டர் நந்தகுமார் மாணவ-மாணவிகளிடம் உறுதி அளித்தார்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment