(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 22, 2015

என்ஜினீயர்களுக்கு ரயில்வே கட்டுமான நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

No comments :
ரயில்வே கட்டுமான நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பணிபுரிய என்ஜினீயர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

இர்கான் நிறுவனமானது 1956-ல் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் கம்பெனி சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. முழுக்க முழுக்க மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாகும் இது. ரயில்வே துறைக்குத் தேவையான கருவிகள், பொருட்களை உருவாக்கித் தருகிறது. ரயில்வே துறைக்குத் தேவையான கட்டுமானங்களையும் உருவாக்கித் தருகிறது இந்த நிறுவனம்.



இந்த நிறுவனத்தில் தற்போது மொத்தம் 30 காலியடங்கள் உருவாகியுள்ளன. உதவி மேலாளர், உதவி என்ஜினீயர், ஜூனியர் என்ஜினீயர், செக்ஷன் ஆபீஸர், உதவி ஆபீஸ் சூப்பிரடெண்ட், டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். செய்த பின்னர் விண்ணப்பத்தின் மற்றொரு நகலை

Joint General Manager/ HRM,
Ircon International Limited,
C-4, District Centre, Saket,
New Delhi

என்ற முகவரிக்கு ஜனவரி 9-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும். கல்வித் தகுதி, வயதுத் தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.ircon.org என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment