(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 17, 2015

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில், மீண்டும் புரோக்கர்கள் தலையீடு!!

No comments :

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு, சான்றிதழ், கடை லைசென்ஸ் பெற்றுதருவதில் புரோக்கர்கள் தலையீடு மீண்டும் துவங்கியுள்ளதால் பயனாளிகள் பணத்தை இழந்து தவிக்கின்றனர்.

ராமநாதபுரத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் விபரம், சம்பந்தப் பட்ட உள்ளாட்சி அலுவலகங் களுக்கு அனுப்பப்படுகிறது. பிறப்பு சான்றிதழுக்காக இந்த அலுவலகங் களுக்கு செல்லும் குழந்தையின் பெற்றோர்கள், விண்ணப்பத்துடன் ரூ.10, தபால் செலவு ரூ. 25 செலுத்த வேண்டும். மூன்று நாட்களுக்கு பின் பதிவு தபாலில் சான்றிதழ் அனுப்பப்படுகிறது.

ராமநாதபுரம் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கேட்டு விண்ணப்பித்த ஏராளமானோருக்கு முறையாக சான்றிதழ் வந்து சேருவதில்லை என புகார் எழுந் துள்ளது. விண்ணப்பித்து பல நாட்களாகியும் சான்றிதழ் கிடைக்காத பலர் நகராட்சி அலுவலகம், வீடு என அலைந்து திரிகின்றனர். சான்றிதழுக்கு ரூ.300 வரை செலவு செய்ய தயாராக உள்ளோருக்கு உடனடியாக கிடைக்கிறது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ், கடை லைசென்சுக்கு விண்ணப்பிக்க வருவோரை நகராட்சி அலுவலக வாசலில் புரோக்கர்கள் மடக்கி பிடித்து பேரம் பேசுகின்றனர். வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க பிறப்பு சான்றிதழ் உடனடி யாக தேவைப்படுவோரிடம் ரூ.2 ஆயிரம் வரை பணம் புரோக்கர் களால் பறிக்கப்படுகிறது.

நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ""பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி தினமும் 50க்கும் மேற்பட்ட விண்ணப்பம் பெறப் படுகிறது. ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் வழங்கப்படுகிறது. வெளி யூரில் வசிப்போருக்கு விரைவு தபாலில் சான்றிதழ் அனுப்பப் படுகிறது.

புரோக்கர்கள் தலையீடு குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சான்றிதழ் பெற இடைத்தரகர்ளை அணுக வேண்டாம் என அலுவலக அறிவிப்பு பலகையில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment