(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 12, 2015

ஈட்டி - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
அதர்வா ஸ்ரீதிவ்யா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடிக்க குளோபல் இன்போடைன்மென்ட் பி. லிட் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில்., இயக்குனர் வெற்றி மாறனின் உதவியாளர் ரவி அரசு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் ஈட்டி” .

ஸ்போர்ட்ஸில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தஞ்சாவூர் பகுதி கல்லூரி மாணவர் அதர்வா., அவரிடம், சென்னை பொண்ணு ஸ்ரீதிவ்யா ஒரு ராங் கால் ரவுடிதனத்தால் வகையாக சிக்கிக்கொள்ள., இருவரும் போனிலேயே, உடன் இருக்கும் நண்பர்களும், படம் பார்க்கும் ரசிகர்களும் பொறாமை படுமளவிற்கு படு பயங்கரமாக கடலை வறுக்கின்றனர்.


இந்நிலையில்., அதர்வா, தன் அத்தலட்டிக் விளையாட்டு போட்டிகள் விஷயமாக சக வீரர்கள் மற்றும் கோச் ஆடுகளம் நரேனுடன் சென்னை வருகிறார். வந்த இடத்தில் வந்த வேலையை மட்டும் பார்க்காமல்., சேலையை, தன் காதல் சோலையைத் தேடிக் கிளம்ப., அதனால் அவர் சென்னையையே கலக்கும் கள்ள நோட்டு கும்பலுக்கு விரோதியாகிறார். இறுதியில் தடை பல கடந்து, வில்லன்களையும், விளையாட்டிலும் வென்று., ஸ்ரீதிவ்யாவின் கரம் பற்றினாரா? இல்லையா..? என்பது தான் ஈட்டிபடத்தின் நீட்டி முழக்கும் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக் கதை.

அதர்வா, புகழேந்தியாக அத்தலட்டிக் ஸ்போர்ட்ஸ் வீரராக., நிறைய ஹோம் ஒர்க்குகள், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் எல்லாம் செய்து ஒரு ஓட்ட பந்தய வீரராக நடிக்கவில்லை, அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், சிறு வயது முதலே த்ராம்ப ஸ்தீனியா எனப்படும் அடிபட்ட இடத்தில் இரத்தம் நிற்காமல் ஒழுகிக் கொண்டே இருக்கும் வியாதியுடைய ஒருவரால் இத்தனை பெரிய ஸ்போர்ட்ஸ்மேனாக வர முடியுமா? என்னும் கேள்விக்கு இயக்குனர் தான் பதில் சொல்ல வேண்டும் .
மற்றபடி அதர்வா .,ஸ்ரீதிவ்யாவுடனான காதல் காட்சிகளிலும் சரி, ஆர் என் ஆர்.மனோகர் உள்ளிட்ட வில்லன்களுடனான மோதலிலும், தடகள பந்தய ஓட்டங்களிலும் சரி., இப்பட டைட்டிலுக்கு ஏற்பவே ஈட்டியாக பாய்ந்து, பறந்து நடித்து பலே, பலே.. சொல்ல வைத்திருக்கிறார்.
ஸ்ரீதிவ்யா, காயத்ரியாக இன்னசென்ட் சென்னை கல்லூரி மாணவியாக., கண்டபடி போனில் அதர்வாவை ராங் கால் போட்டு திட்டிவிட்டு பின், அதர்வாவின் மிரட்டலுக்கு பயந்து அடிக்கடி அவர் போனுக்கு ரீ-சார்ஜ் செய்வதும், அதன் பின் இருவரும் காதல் வலையில் வீழ்வதும் சினிமாடிக்காக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது ஸ்ரீ திவ்யாவின் நடிப்பில்.

அதர்வாவின் கோச்சாக வரும் ஆடுகளம் நரேன், அப்பா ஜெயபிரகாஷ், ஸ்ரீதிவ்யாவின் அப்பா அழகம்பெருமாள், அண்ணன் போலீஸ் அதிகாரி செல்வா, ஒயிட் & ஒயிட் வில்லன் ஆர் என் ஆர்.மனோகர், நண்பர்கள் கும்கி அஸ்வின், முருகதாஸ் உள்ளிட்டோரும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கின்றனர். அதிலும் கோச் நரேன்., ‘நீ பெற இருக்கும் வெற்றி உன் சந்தோஷம் மட்டுமல்ல.. உங்கப்பாவின் கனவு, எனது லட்சியம்…’ என அதர்வாவை உசுப்பேற்றி உசுப்பேற்றி ஒரு சிறந்த ஓட்டப்பந்தய வீரராக்குவது மூலம் பிரமாதமான ரடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பஞ்சு மிட்டாய்…’ ‘குய்யோ முய்யோ….’ உள்ளிட்ட பாடல்கள் தாளம் போட வைக்கும் ரகம்.
சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவில் படத்தில் அடிக்கடி வரும்தஞ்சை கோபுரமும் சென்னை நகரமும்மாதிரியே படமும், இப்பட பாத்திரங்களும் பிரகாசம். ராஜா முகம்மதுவின் படத்தொகுப்பும் பக்கா!

திறமைங்கறது கடின பயிற்சி தான்..’ ‘என் பையன் இந்தியாவுல ஜெயிக்கிறது முக்கியமல்ல.. இந்தியாவுக்காக ஜெயிக்கிறது தான் முக்கியம்…’ உள்ளிட்ட வசனங்களில் கவனிக்க வைத்த இப்பட இயக்குனர் ரவி அரசு., வெறும் இன்ஸிடண்ட்டுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு., இண்டர்வெல்லுக்கு அப்புறமும் கதையில் கவனம் செலுத்தாது, காதல் காட்சிகளிலும், இன்னும் பிற காமெடி சீன்களிலும் கவனம் செலுத்தி இருப்பதும், க்ளைமாக்ஸில் ஹீரோ, திடீர் போலீஸ் ஆபிஸர் ஆவதும் சற்றே கொட்டாவி விட வைக்கிறது.
மற்றபடி, ‘ஈட்டி சுட்டி!

விமர்சனம்: கலக்கல் சினிமா



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment