(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 1, 2015

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கால்பந்து ஆட்டத்தில் பெரியபட்டினம் அணி வெற்றி!!

No comments :
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கால்பந்து ஆட்டத்தில் பெரியபட்டினம் அணி வென்றது.

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று முன் தினம் ராமநாதபுரம், பரமக்குடியில் துவங்கியது. சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியில் 28 அணிகள் பங்கேற்றன.



பெரியபட்டினம், மேலக்கோட்டை அணிகள் மோதிய இறுதி போட்டியை அமைச்சர் சுந்தர்ராஜன் துவக்கி வைத்தார். இதில் பெரியபட்டினம் அணி வென்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க., செயலர் தர்மர், மாவட்ட விளையாட்டு அலுவலர் வெங்கட்ராமன், கால்பந்து பயிற்சியாளர் ஜான் சகாயராஜ் பங்கேற்றனர்.


செய்தி: திரு. ஹசன், பெரிய பட்டினம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment