Tuesday, December 22, 2015
இலவசமாக பழுது பார்க்கும் முகாம்கள் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்
நடத்தப்பட்டு வரும் வாகனங்களை இலவசமாக பழுது பார்க்கும் முகாம்கள் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்
கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கில் சிக்கி ஏராளமான
வாகனங்கள் பழுதடைந்து உள்ளன.
பழுதான இரு
சக்கர மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களை இலவசமாக பழுது பார்க்க 200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, கடந்த 12-ம் தேதி இலவச பழுது பார்க்கும் முகாம்கள் தொடங்கின. சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர், சூளை உள்பட 106 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற இந்த சிறப்பு முகாம்கள் நேற்று நிறைவு அடைந்தன.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பழுது நீக்கும் முகாம்களை வருகின்ற 31-ம் தேதி வரை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, டி.வி.எஸ்., யமாஹா,
என்ஃபீல்டு
நிறுவனங்கள் மட்டும் பழுதுநீக்கும் முகாம்களை நீ்ட்டிக்க தற்போது ஒப்புதல் அளித்திருப்பதாகவும், மற்ற நிறுவனங்களிடம் அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் மாநில
தொழில்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செய்தி: விகடன்
No comments :
Post a Comment