Wednesday, December 9, 2015
ராமநாதபுரத்தில் டிசம்பர் 21, 22 தேதிகளில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகள்
ராமநாதபுரத்தில்
மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகள் இம்மாதம் 21
மற்றும் 22 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக
மாவட்ட இறகுப் பந்துக் கழக மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சேக் அப்துல்லா
செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இறகுப்பந்து
விளையாட்டினை மேம்படுத்திட, மாவட்ட இறகுப் பந்துக் கழகம் மாவட்ட
அளவிலான இறகுப் பந்துப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இப்போட்டிகள் இம்மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு
மைதானத்தில் நடைபெறும்.
முதற்கட்டமாக 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் போட்டிகள்
நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் இம்மாதம் 18 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களின் கையெழுத்துடன் வயதுச்
சான்றிதழ்களை அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதே போல ஆண், பெண்களுக்கான பொதுப்பிரிவு போட்டிகள் இம்மாதம் 26,
27 ஆம் தேதிகளில்
நடத்தப்படும். மாவட்டத்தில் இயங்கும் இறகுப் பந்து கிளப்புகள் மூலமாக பதிவு
செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே இதில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டியில்
பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்ய
வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment