(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 6, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம், தொண்டி, வட்டாணம், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் கூடுதலாக மழை பெய்து வருகிறது. பலத்த சூறை காற்றுடன் தொடங்கிய இந்த மழை இடைவிடாது தூறலாகவும், பின்னர் பலத்த மழையாகவும் பெய்தது.



இந்த தொடர்மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக சாலைகளில் மழைநீர் தேங்கி பள்ளங்களை நிரப்பி உள்ளதால் வாகனங்களில் செல்வோர், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து தங்களின் நிலங்களில் தண்ணீர் நிற்கும் வகையில் கரைகளை பலப்படுத்தி வருகின்றனர். இதேபோன்று தொடர்ந்து மழை பெய்தால் எந்த சிரமும் இல்லாமல் நெற்பயிர்கள் தப்பி பிழைத்து நல்ல மகசூல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

பாம்பன்–27,
பரமக்குடி–1,
ராமநாதபுரம்–29,
திருவாடானை–5,
தொண்டி–21,
பள்ளமோர்குளம்–10,
மண்டபம்–21,
ராமேசுவரம்–20,
தங்கச்சிமடம்–21,
வட்டாணம்–42,
தீர்த்தாண்டதானம்–40,
ஆர்.எஸ்.மங்கலம்–7,
கடலாடி–2,
வாலிநோக்கம்–7.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment