Sunday, December 20, 2015
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 12!!
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (ஏஐபிஎம்டி)
அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 12 கடைசித் தேதியாகும்.
அபராத கட்டணத்துடன் பிப்ரவரி10 ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். இதற்கு இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அரசு,
அரசு உதவிபெறும், தனியார் மருத்துவக்
கல்லூரிகள்,
பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் அகில இந்திய
ஒதுக்கீடான 15
சதவீத மாணவர் சேர்க்கைக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
(சி.பி.எஸ்.இ.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு
நடத்தப்படுகிறது.
வருகிற 2016-ஆம் ஆண்டுக்கான நுழைவுத்
தேர்வு மே 1-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் இயற்பியல், வேதியியல்,
உயிரியல் பாடங்களிலிருந்து 180 கேள்விகள் கேட்கப்படும். இவை அனைத்தும் “அப்ஜெக்டிவ் (கொள்குறி)
வகை தேர்வு முறைக் கேள்விகளாக இருக்கும்.
இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 12 கடைசித் தேதியாகும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க பிப்ரவரி 10 கடைசித் தேதியாகும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment