(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, December 30, 2015

குவைத்தில் நடைபெற்ற 11ம் ஆண்டு KTic மீலாது விழா!

No comments :
குவைத்தில் நடைபெற்ற 11ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாள் விழா! தமிழக அறிஞர் பெருமக்கள் பங்கேற்பு! சிறப்பு மலர்வருட நாட்காட்டி உட்பட நூல்கள்குறுந்தகடுகள் வெளியீடு!

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 11ம் ஆண்டு ஐம்பெரும் மீலாது விழா நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் டிஸம்பர் 24,2015 வியாழன் அன்று குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் தொடங்கியது. வெள்ளிக்கிழமை (25/12/2015) அன்று நண்பகல் நிகழ்ச்சி அதே பள்ளிவாசலிலும்மாலை நிகழ்ச்சி ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பள்ளிவாசலிலும் நடைபெற்றது. சனிக்கிழமை (26/12/2015) அன்று ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் நிறைவு விழா நடைபெற்றது.



அனைத்து நிகழ்ச்சிகளையும் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மது பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். இளவல் எம்.என். அப்துல் பாஸித் திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைச் செயலாளரும்சென்னைப் பல்கலைக்ககழக அரபித்துறை பேராசிரியருமான மவ்லவீ முனைவர் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவீ மற்றும் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சென்னை துறைமுக வட்டார துணைச் செயலாளரும்மண்ணடி லஜ்னத்துல் முஹ்சினீன் பள்ளிவாசலின் தலைமை இமாமுமான மவ்லவீ எஸ். ஃபக்ருத்தீன் ஃபாஜில் பாகவீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.






இவ்விழாவில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் மவ்லவீ அன்வர் பாதுஷா உலவீ அவர்களுக்கு மார்க்க விளக்க பேரொளிமற்றும் மவ்லவீ ஃபக்ருத்தீன் ஃபாஜில் பாகவீ அவர்களுக்கு இளம் மார்க்கப் போராளிவிருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. 

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் 11ம் ஆண்டு சிறப்பு மலர், 2016ம் ஆண்டு வருட நாட்காட்டி, சிறப்பு விருந்தினர்களின் சொற்பொழிவு குறுந்தகடுகள் மற்றும் பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் வெளியிட குவைத்தில் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.

இரவு நிகழ்ச்சிகள் அனைத்திலும் சிறப்பு கேள்வி-பதில் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு, மவ்லவீ அன்வர் பாதுஷா உலவீ அவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை தந்தார்.

மூன்று நாட்கள், நான்கு இடங்களில் தொடராக நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 2,000 (இரண்டாயிரம்) நபர்கள் வரை கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பு மலர், வருட நாட்காட்டி, தேநீர், பழரசம், பேரீத்தம் பழம், சிற்றுண்டி மற்றும் இரவு உணவுகளும் வழங்கப்பட்டன.


செய்தி: திரு. கலீல் பாகவி, குவைத்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment