Saturday, November 28, 2015
ராமநாதபுர இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!!
ராமநாதபுரம் நகரைச் சேர்ந்த அசரப்அலி என்ற இளைஞர் பல்வேறு
குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருந்ததால், அவரை குண்டர் தடுப்புச்
சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் நகர் சின்னக்கடைத் தெருவில் வசித்து வரும்
சித்திக் மகன் அசரப்அலி(22).
இவர் கடந்த 16.10.2015 ஆம் தேதி டாக்டர்.பாரூக் என்பவரை கத்தியால் குத்த முயன்று அவரது வீட்டில்
இருந்த பொருள்களையும் திருட முயன்றார். வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்
கொண்டதால் தப்பித்துக்கொண்ட டாக்டர்.பாரூக் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம்
பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அசரப்அலியை கைது செய்தனர்.
இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாலும், ஏற்கெனவே குற்ற வழக்கு ஒன்றில் ராமநாதபுரம் சிறையில் இருந்த போது
தப்பிச்சென்று மீண்டும் பிடிபட்டதாலும் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
செய்யலாம் என ராமநாதபுரம் எஸ்.பி. என்.மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய
உத்தரவிட்டார்.
இந்த உத்தரவினைத் தொடர்ந்து காவல்துறையினர் மதுரை மத்திய
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசரப்அலியிடம் அதற்கான உத்தரவை வழங்கியுள்ளனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment