Saturday, November 21, 2015
கீழக்கரையில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்க கோரிக்கை!!
கீழக்கரை பேருந்து நிறுத்தங்களின் இருபுறமும் நிழற்குடைகள்
அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கீழக்கரையில் புதிய பேருந்து நிலையம் உட்பட 5 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள்
பேருந்துகளில் சென்று வருகின்றனர். ஆனால், ஒரு பேருந்து நிறுத்தத்தை
தவிர மற்ற அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை.
இதனால் பேருந்திற்காக காத்து நிற்கும் பயணிகள் மழைக் காலங்களில் மிகவும்
அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை அல்லது வெயிலுக்காக பேருந்து நிறுத்தம் அருகே
ஒதுங்கி நிற்கும் பயணிகள் பேருந்து வந்தவுடன் அவசரமாக ஓடி கீழே விழுவதும், பேருந்துகளை தவறவிடுவதும் தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகிறது.
எனவே பேருந்து நிறுத்தங்களின் இரு பகுதிகளிலும் நிழற்குடைகள் அமைக்க மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment