(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 23, 2015

கீழக்கரையில் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடிக்க கோரிக்கை!!

No comments :
கீழக்கரையில் பழுதடைந்துள்ள கட்டடங்களை அசம்பாவிதம் நிகழும் முன் இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கீழக்கரை நடுத்தெருவில் உள்ள மையப் பகுதியில் மிகவும் பழமையான சுற்றுச்சுவர் பாதி இடிந்த நிலையிலும், சுவரின் மற்றொரு பகுதி விரிசலடைந்து கீழே விழும் நிலையிலும் உள்ளது.

இப்போது மழைக் காலமாக இருப்பதால் எந்நேரமும் இந்த சுவர் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த சுற்றுச்சுவரை கடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.




எனவே இந்த சுற்றுச்சுவரை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோல் பழுதடைந்துள்ள மற்ற கட்டடங்களையும் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment