(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 17, 2015

கீழக்கரையில் பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு!!

No comments :
கீழக்கரையில் பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கீழக்கரை பனியக்காரத் தெருவைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் மகன் அப்துல்ஹக்கீம்(52). இவர் தனது வீட்டில் மழைநீர் ஒழுகியதால் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 1-ம் தேதி முதல் அருகில் உள்ள சேரான் தெருவில் ஒரு வீட்டில் தாற்காலிகமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 

தினமும் தனது வீட்டிற்குச் சென்று சில மணி நேரம் இருந்து விட்டுச் செல்வார்.

இந்நிலையில் வழக்கம் போல் திங்கள்கிழமை நண்பகல் தனது சொந்த வீட்டிற்குச் சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் வீடு திறந்து கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல்ஹக்கீம் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டது தெரியவந்தது.

இது குறித்து அப்துல்ஹக்கீம் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment