Sunday, November 1, 2015
ராமநாதபுரத்தில் ரூ.6 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானம்!!
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு
அரங்கம் அருகில் சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டு மைதானம் ரூ.6 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தை தமிழக
விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ், ஆட்சியர் க.நந்தகுமார் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது,
முதுகுளத்தூர் நிலவள வங்கியின் தலைவர் ஆர்.தர்மர், ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி விளையாட்டு சங்கத்தின் தலைவர்
டாக்டர்.டி.அரவிந்தராஜ்,
செயலாளர் அ.செல்லத்துரை அப்துல்லா, துணைத் தலைவர் மனோகரன்,
இணைச்செயலாளர் கிழவன்சேதுபதி, பட்டினம் காத்தான் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சித்ராமருது, உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத், உடற்கல்வி இயக்குநர்
சதீஷ்குமார்,
மாவட்ட வன அலுவலர் தீபக்.எஸ்.பில்கி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பழனி உட்பட பலரும் உடனிருந்தனர்.
பின்னர் மைதானத்தில் நடந்த ஒத்திகைப்போட்டியை துவக்கி வைத்து அமைச்சர்
எஸ்.சுந்தரராஜ் கூறியது:
இம்மைதானம் சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட
செயற்கைப்புல்லால் நீல நிறத்திலும், இந்தப்புல்லை
ஒட்டுவதற்கான பற்பசை சுவிட்சர்லாந்தில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப்புல் மைதானத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம்
இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. பல்வேறு
நன்கொடையாளர்கள் மூலம் நிதி பெறப்பட்டு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.6 கோடி மதிப்பில் மைதானம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மேலும் கூறுகையில், தமிழகத்திலேயே செயற்கைப்புல் விளையாட்டு மைதானங்கள் சென்னை,திருச்சி,திருநெல்வேலி,மதுரை ஆகிய இடங்களில் இருந்தாலும், நீலநிறப் புல் மைதானம்
முதல் முதலாக ராமநாதபுரத்தில் தான் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்தும் வீரர்கள் வந்து விளையாடும் வகையில் இந்த மைதானம் சர்வதேச
தரத்தினால் ஆனது என்பதற்கான சான்றை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் வழங்கும்.
அந்த நிறுவனம் இந்த மைதானத்தை பார்வையிட்டு உள்ளது. அவர்களிடமிருந்து
தரச்சான்றிதழ் பெற்றவுடன் இந்த மாத இறுதிக்குள் திறப்பு விழா நடத்திட முடிவு
செய்துள்ளோம். விரைவில் சர்வதேச விளையாட்டு வீரர்கள் வந்து பார்வையிட்டு
போட்டிகளில் பங்கேற்கும் வகையில் கண்காட்சிப் போட்டி நடத்தப்படும் என்றார்
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment