(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 15, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க 30 மையங்கள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பாதிப்பில் இருந்து  மக்களைப் பாதுகாக்க 30 மையங்கள் அமைக்கப்படும் என உயர்அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில்,ஆட்சியர் க.நந்தகுமார் தலைமை வகித்தார். அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், தென்மண்டல ஐ.ஜி.அபயகுமார் சிங், எஸ்.பி. மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்குப் பின்னர் மீன்வளத்துறை செயலாளரும்,மாவட்ட கணிப்பாய்வு அதிகாரியுமான டாக்டர்.எஸ்.விஜயகுமார் கூறியது:

இம்மாதம் 16,17,18 ஆகிய 3 தினங்களில் வரலாறு காணாத மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்பார்த்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசின் மூத்த அதிகாரிகளை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமித்து அங்கு முகாமிட்டு மழையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மழை பெய்து முடியும் வரை அந்தந்த மாவட்டங்களில் தங்கி இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலோர மாவட்டமாக இருப்பதால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 30 பாதுகாப்பு மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றுக்கு தலா 2 மையங்கள் செயல்படும். ஒவ்வொரு மையத்திலும் சுமார் 1000 பேர் தங்குவதற்கு வசதி செய்யப்படும். அங்கு ஜெனரேட்டர், குடிநீர், கழிப்பறை வசதி இடம்பெறும்.  மேலும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்படும். சமையல் செய்பவர்கள், மருத்துவர்கள் அங்கு பணியில் இருப்பார்கள்.

நீர்நிலைகள், கண்மாய்களில் கசிவு உடையாமல் தடுக்க சுமார் 25 ஆயிரம் மணல் மூடைகள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த வித உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும்.

இலவச தொலைபேசி எண்: பொதுமக்கள் மழை தொடர்பான தகவல்களை 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் நவீன இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யப் போகும் விபரத்தை கிராமங்கள் தோறும்  ஞாயிற்றுக்கிழமை தண்டோரா மூலம் தெரிவிக்கப்படும் என்றும் டாக்டர்.எஸ்.விஜயகுமார் தெரிவித்தார்.

ஆவணங்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு
வீடுகளில் முக்கிய ஆவணங்கள் தொலைந்து விடும் என அச்சப்படுவோர் அதை ஒரு உறையில் போட்டு பத்திரமாக பாதுகாப்பு மையத்தில் கொடுத்து வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம். இதற்கென அம்மையத்தில் ஒரு அலுவலர் பணியில் இருப்பார்.

கிராமங்களாக இருந்தாலும் ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் ஏதேனும் ஒரு அரசுக் கட்டடத்தில் பாதுகாப்பு மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


செய்தி: தினசர்கள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment