(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 14, 2015

ராமநாதபுரத்தில் போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நில மோசடி!!

No comments :
ராமநாதபுரத்தில் போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக சார்-பதிவாளர், பத்திர எழுத்தர் உள்பட 8 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் அருகில் உள்ள 8 ஏக்கர் 63 சென்ட் நிலத்தை குமரன் சேதுபதி என்பவரிடமிருந்து ராமநாதபுரம் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த எம்.கே. முகம்மது அலி கடந்த 2008 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். இந்த சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும்.

இந்த சொத்தை ராமநாதபுரம் வீ. முனியாண்டி என்பவர் போலி ஆவணமும், போலியான வில்லங்க சான்றிதழும் தயாரித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூ. தங்கவேலுவுக்கு இனாம் செட்டில் மென்ட் மூலமாக கொடுத்துள்ளார்.  பின்னர் தங்கவேலு அந்த நிலத்தை ராமநாதபுரத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷூக்கும், சரவணனுக்கும் கிரையம் செய்து கொடுத்துள்ளார்.


இந்த சொத்தை விற்பதற்கு வெளிப்பட்டினத்தைச் சேர்ந்த சார்-பதிவாளர், பத்திர எழுத்தர் மற்றும் முனியாண்டி என்பவரது மகன்களான அன்பரசன், ஹரிதாஸ் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

சொத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றிருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து எம்.கே. முகம்மது அலி மாவட்ட நிலமோசடி தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் பாஸ்கரன் சார்-பதிவாளர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment