Monday, November 30, 2015
இஞ்சி இடுப்பழகி - தமிழ் திரை விமர்சனம்!!
நடிகர்கள்: அனுஷ்கா, ஆர்யா, பிரகாஷ் ராஜ்,
ஊர்வசி
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
இசை: எம்எம் கீரவாணி
தயாரிப்பு: பிவிபி சினிமா
இயக்கம்: கேஎஸ் பிரகாஷ் ராவ்
உடல் எடை ஒரு பிரச்சினையே இல்லை... எடைக்குறைப்பு என்ற பெயரில் ஆபத்தான வழிகளுக்குப் போகாதீர்கள் என்ற ஒன்லைனுக்குள், ஆர்யா - அனுஷ்கா காதலைச் சொல்லியிருக்கிறார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத குண்டுப் பெண் அனுஷ்காவைப் பெண் பார்க்க வரும் எல்லாருமே உடல் எடையைக் காரணம் காட்டி மறுத்துவிடுகிறார்கள். அம்மா ஊர்வசிக்கு பெண்ணை நினைத்து மகா கவலை. அப்போதுதான் ஆர்யா வருகிறார். டாக்குமென்டரி பட இயக்குநராகும் முயற்சியில் உள்ள அவருக்கு திருமணத்தில் இஷ்டமில்லை. அனுஷ்காவுக்கு ஏகப்பட்ட உடல் குறைப்பு டிப்ஸ் கொடுத்துவிட்டு சமாதானமாகப் பிரிகிறார்.
ஆனால் அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக்
கொள்கிறார்கள். மெதுவாக ஆர்யா மீது அனுஷ்காவுக்கு காதல் பிறக்கும்போது, ஆர்யா வேறு ஒரு பெண்ணை விரும்புவது தெரிந்து அதிர்கிறார். உடல் எடைதானே
பிரச்சினை... அதைக் குறைக்கலாம் என்று பிரகாஷ்ராஜ் நடத்தும் சைஸ் ஜீரோ க்ளினிக்
போகிறார். ஆனால் அந்த க்ளினிக் போனதால் கிட்னி பாதிக்கப்பட்டு உயிருக்குப்
போராடும் தோழியின் நிலை கண்டு அதிர்ந்து, பிரகாஷ் ராஜுக்கு
எதிராகப் போராட ஆரம்பிக்கிறார். இருக்கிற உடம்பை பார்த்துக் கொண்டால் போதும். உடல்
எடையைக் குறைக்க ஆபத்தான வழிகளை நாட வேண்டாம் என தீவிர பிரச்சாரத்தில் இறங்க, அவருக்கு ஆர்யா கை கொடுக்கிறார். இப்போது ஆர்யாவுக்கு அனுஷ்கா மீது காதல்
பிறக்கிறது. ஆனால் சொல்லத் தயங்குகிறார். அனுஷ்காவின் பிரச்சாரத்துக்கு உதவ வரும்
பெரிய தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஆர்யா தவிக்கிறார்.
இருவரும் இணைந்தார்களா?
சைஸ் ஜீரோவுக்கு எதிரான அனுஷ்காவின் பிரச்சாரம் என்ன ஆனது? என்பது மீதி.
ஆர்யாவுக்கு அதிகம் வேலையில்லை. தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். அனுஷ்கா மீது காதல் பிறப்பதை இயல்பாகக் காட்டியிருக்கிறார். ஆர்யாவின் இன்னொரு காதலியாக வரும் சோனல் சௌஹானும் அழகுதான். சைஸ் ஜீரோ க்ளினிக் நடத்தும் பிரகாஷ்ராஜ் எப்போது பார்த்தாலும் டிவி திரையில் அனுஷ்காவின் லைவ் பிரச்சாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது மீசையும் லுக்கும் பக்கா தெலுங்கு வில்லன் சாயல்.
பிரமாதமான நடிகர்கள், பெரும் தயாரிப்பு நிறுவனம் எல்லாம் கிடைத்தும் சரியாகப் பயன்படுத்தத் தவறி இருக்கிறார் புதிய இயக்குநர் பிரகாஷ் ராவ். அனுஷ்காவுக்காக வேண்டுமானால் ஒரு முறை பார்க்கலாம்!

விமர்சனம்: ஒண் இண்டியா
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Sunday, November 29, 2015
சவுதியில் பணிபுரிய மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசுஅயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்!!
சவுதியில் டாக்டராக பணிபுரிய
விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது:
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு
நிறுவனம் மூலம் சவுதிஅரேபியா ஜெத்தாவில் முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பல்
மருத்துவம் தவிர மற்ற துறை கண்சல்டன்டுகள், சிறப்பு டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இரண்டு ஆண்டு பணி அனுபவம், 50
வயதிற்குட் பட்டவராக இருத்தல் வேண்டும்.
டாக்டருக்கு ரூ.4.25 லட்சம் முதல் ரூ.5.10
லட்சம் வரையும், சிறப்பு டாக்டருக்கு ரூ.2.89
லட்சம் முதல் ரூ.3.91
லட்சம் வரை மாத ஊதியமாக
நிர்ணயிக்கப்படும்.
இலவச விசா, குடும்ப விசா, இருப்பிடம், இதர சலுகைகள் உண்டு. விபரங்களுக்கு 044
22502267 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
துபாயில் சொக்க வைக்கும் மிராக்ல் கார்டன் - வண்ணப்பூந்தோட்டம்!!
வளைகுடா என்றதும் பலருக்கு நீண்ட பாலைவனம் நினைவுக்கு வரும் ஆனால் மலர்களும், மரங்களும் நினைவிற்கு வரும் வகையில் வளைகுடா நாடுகளின் நகரங்களில் ஒன்றான துபாயில் மரம், செடிகளோடு இயற்கை சூழலை உருவாக்க முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் அழகிய தோட்டங்களை உருவாக்குகின்றனர்.
இந்நிலையில் 2013ம் வருடம் சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் வித விதமான பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் துபாயில் பிரம்மாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. கோடை காலத்தையோட்டி தற்காலிகமாக மூடப்பட்ட துபாயில் உள்ள பிரம்மாண்ட மலர் பூங்கா நேற்று மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதற்கான துவக்க நிகழ்ச்சி பூங்கா அரங்கில் நடைபெற்றது. முதல் நாளிலேயே ஏராளமானோர் குவிந்தனர். இப்பூங்கா வருடத்தில் ஆறுமாத காலம் செயல்படும்.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 4.5 கோடிக்கும் மேற்பட்ட மலர்களோடு இப்பூங்கா ஏற்படுத்தப்பட்டு பல்வேறு அழகிய வடிவங்களோடு மலர் அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் லட்சக்கணக்கான மக்கள் இப்பூங்காவிற்கு வருகை தந்து பூக்களை ரசித்து சென்றனர். உலகின் மிகப்பெரிய மலர் பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்கா நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
தமாஷா - ஹிந்தி திரை விமர்சனம்!!
இயக்குநர் இம்டியாஸ் அலியுடன் ரன்பிர்
கபூரின் இரண்டாவது இன்னிங்ஸ் தான் தமாஷா. புரிதலுடன் தீபிகா படுகோன், புதிருடன் ரன்பின் கபூர் இவர்களுக்கு இடையேயான
காதலில் சதமடிக்கும் காட்சிகளின் கோர்வையே “தமாஷா” படம்.
சிம்லாவில் பிறந்து வளரும் நாயகன் ரன்பிர் கபூர் (வேத்), சிறுவயதிலிருந்தே புராணக் கதைகள் கேட்டே வளர்கிறார். கொல்கத்தாவைச் சேர்ந்தவர்
தாரா (தீபிகா). இவர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டின் கொர்சிகாவில்
சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே பாஸ்போர்ட்டை இழந்துவிட்டு அழுகாச்சி
பெண்ணாகவே அறிமுகமாகியார் தீபிகா. இருவரும் பேசிப் பழகுகிறார்கள். கொர்சிகாவில்
நடக்கும் காட்சிகளில் இருவரும் ஹிந்தி பட டயலாக்குகளால் தெறிக்கவிடுகிறார்கள்.
இந்தியா திரும்பும் தீபிகா, ரன்பிர்கபூருடன் இருந்த நாட்களை நினைத்து அவர் மேல் காதலில் விழுகிறார்.
ரன்பிர் டில்லியில் இருப்பதைத் தெரிந்து சந்திக்கச் செல்கிறார். இருவரும்
காதலிக்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.
தான் விரும்பும் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியாமல்
இந்த சமுதாயத்திற்காக தன்னை மாற்றிக்கொண்டு டில்லியில் வாழ்கிறார் ரன்பிர்கபூர். கொர்சிகாவில் பார்த்த ரன்பிர்கபூராக இப்போது இல்லையென்று அவன் மேல்
ஆதங்கப்படுகிறார் தீபிகா. இருவருக்கும் இடையே சண்டையும் வருகிறது. அதன்பின்
ரன்பிர்கபூருடனான காதல் கைசேர்ந்ததா என்பதே மீதிக் கதை.
சில காட்சிகளில் சுவரோவியங்கள் காட்சியை நிறைக்கின்றன.
ஒவ்வொரு ஓவியமும் தனித்தனியே கதை சொல்லிச் செல்வது படத்தின் காட்சிக்கு மேலும்
அழகு சேர்க்கிறது.
இந்தியின் ஹிட் படமான “பர்ஃபி”யில் நடித்த ரன்பிர்கபூரை மீண்டும் திரையில் ஒருமுறை கொண்டுவந்திருக்கிறார்
இயக்குநர் இம்டியாஸ் அலி. ஜாலியான பையனாக இருக்க நினைக்கும் ரன்பிர், சமுதாயத்திற்காகவும்,
தன் அப்பாவுக்காகவும், தனக்குப் பிடிக்காத
விஷயங்களைச் செய்துவரும் காட்சிகள், அதனால் ஏற்படும் மன
அழுத்தம்,
தீபிகாவிடம் கோபத்தில் பேசும் இடமென்று அனைத்து இடங்களிலும்
சிக்ஸர்களை விளாசுகிறார்.
ஒளிப்பதிவும், இசையும் இந்தப் படத்தின்
ஸ்பெஷல் விஷயங்கள். படத்தின் லைட்டிங் மற்றும் கேமரா வேலைகளில் இந்தப் படத்திலும்
வெரைட்டி காட்டியிருக்கிறார் ரவிவர்மன்.
படத்தின் பின்னணி மற்றும் பாடல்கள், படம் மெதுவாக நகரும் போதெல்லாம் கைகொடுத்து காப்பாற்றுவது போல
அமைந்திருக்கிறது. இருப்பினும் காதலர்களுக்காக இன்னும் சில பாடல்களை டெடிகேட்
செய்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனி சல்யூட்.
ரன்பிர் கபூரும் தீபிகாவும் இணைந்து நடித்த ஏக் திவானி ஹய் ஜவானி படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு முறை இருவரின் வேதியியல் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ரன்பிர் கபூரும் தீபிகாவும் இணைந்து நடித்த ஏக் திவானி ஹய் ஜவானி படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு முறை இருவரின் வேதியியல் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
இப்படத்தில் காதலை மட்டும் சொல்லாமல், காதலிலும்,
வாழ்க்கையிலும் நமக்கு என்ன பிடிக்குமோ அதைத் தான்
செய்யணும்,
பிடிக்காத வாழ்க்கை நிச்சயம் நரகத்திற்குச் சமம் என்பதைக்
கதையில் சொல்லிச் செல்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில் தமாஷா - மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டுத் தேடும்
காதலர்களை மையப்படுத்திய அழகான காதல் படம்!
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
தமிழக முதல்வரால் சமூக நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழக முதல்வரால் சமூக நல்லிணக்கத்திற்கான
கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. விருதுக்கான விண்ணப்பங்கள் மற்றும்
விபரம் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான
ஆவணங்களை இணைத்து நவ., 30 க்குள் மாவட்ட
விளையாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு
தகுதியானது அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என, கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Saturday, November 28, 2015
உப்பு கருவாடு - தமிழ் திரை விமர்சனம்!!
நடிகர்கள்: கருணாகரன், நந்திதா, எம்எஸ் பாஸ்கர்,
ரஷிதா, மயில்சாமி, சதீஷ்,
சாம்ஸ்
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி
இசை: ஸ்டீவ் வாட்ஸ்
வசனம்: பொன் பார்த்திபன்
தயாரிப்பு: ராம்ஜி நரசிம்மன்
இயக்கம்: ராதாமோகன்
ஒரு சுமாரான முதல் படம் எடுத்த இயக்குநர்... அவரது அடுத்த படம் பாதியில் நின்று போகிறது. சினிமாவைத் தவிர எதுவும் தெரியாத அந்த இளைஞர் தன்னை நம்பி நிற்கும் நான்கு பேருடன் சேர்ந்து வாய்ப்புக்கு அலைகிறார். அப்போது கடல்புரத்தில் உள்ள ஒரு பெரிய மனிதர் அவர்களை வைத்து படம் தயாரிக்க முன்வருகிறார், ஒரு நிபந்தனையுடன். அதாவது ஹீரோயின் அவர் மகளாக இருக்க வேண்டும்! வேறு வழியில்லை. ஒப்புக் கொள்கிறார்கள். நடிப்பு என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் அந்தப் பெண்ணை எப்படியோ கஷ்டப்பட்டு தேற்றுகிறார்கள். சரியாக ஷூட்டிங் ஆரம்பிக்கும் நாளன்று ஹீரோவும் ஹீரோயினும் காணாமல் போக... மொத்த யூனிட்டையும் அடி வெளுத்துவிடுகிறார் பெரிய மனிதர். இயக்குநரையும் அவருடன் உள்ளவர்களையும் சிறைப்படுத்திவிடுகிறார்.
ஹீரோவும் ஹீரோயினும் ஓடிப்போய்விட்டார்களா என்றால், ம்ஹூம்... அங்குதான் தேவயானி - ராஜகுமாரன் லவ் ஸ்டோரி ரேஞ்சுக்கு ஒரு ட்விஸ்டு வைத்திருக்கிறார் ராதா மோகன். ஹீரோயின் எங்கே போனார்... இயக்குநர் படம் எடுத்தாரா? என்பதெல்லாம் கலகலப்பான இரண்டாம் பாகம்! படம் ஆரம்பிக்கும்போது, என்னடா இது, இன்னுமொரு சினிமாவுக்குள் சினிமா கதையா? என்ற கேள்வி எழுந்தாலும், பொன் பார்த்திபனின் வசனங்கள் அந்த கேள்வியை சிறடிக்கின்றன. நொடிக்கொரு அதிர்வேட்டாக வெடிக்கின்றன வசனங்கள். சினிமாக்காரர்களுக்கு நன்கு புரியும் இந்த வசனங்கள், வெகு ஜனங்களிடம் எந்த அளவு போய்ச் சேரும் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். கருணாகரனுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. பெரிதாக அவர் உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்கவில்லை என்றாலும், மாரிமுத்துவிடம் ஆவேசமும் தன்னிரக்கமும் கலந்து கட்டி பேசும் நான் ஸ்டாப்பாக வசனங்கள்... அபாரம். "சமூகத்தை அவமானப்படுத்துவதாகக் கொந்தளிக்கிறீங்களே..." என்று ஆரம்பித்து எந்தெந்த அநியாயங்களையெல்லாம் கைகட்டி வாய் மூடி வேடிக்கைப் பார்க்கிறது இந்த சமூகம் எனப் பட்டியலிடும் அந்தக் காட்சி சாட்டையடி!
"சண்முகத்தை அவமானப்படுத்திட்டீங்கன்னு சொல்றாங்களே... யாருங்க அந்த சண்முகம்?" என்று அப்பாவியாக சவுட் செந்தில் கேட்குமிடத்தில் வெடிச் சிரிப்பு. அந்த மலையாளப் பாடகரும் டவுட் செந்திலும் கட்டி உருளாத குறை. ஆனால் அதற்கும் மேலான எஃபெக்ட் பாடகரிடம் மாட்டிக் கொண்டு செந்தில் முழிக்கும் காட்சிகள்! படம் தயாரிக்கிறேன் என்று முன்வரும் சில 'அய்யாக்கள்' கவிதை எழுதுவதாக, பாடல் இயற்றுவதாகச் சொல்லிக்கொண்டு கொடுக்கும் இம்சைகளை இதைவிட நக்கலாக யாரும் சொல்லிவிட முடியாது.

நந்திதாவின் லூஸ்தனமான நடிப்பு
ஓகேதான். ஆனால் அவர் சிரித்தால்தான் பக்கென்று ஆகிவிடுகிறது. மயில்சாமியை இந்தப்
படத்தில்தான் முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 'கேஸ் போனாலும் நல்ல சகுனம்தான்யா' என்று அவர்
நியாயப்படுத்தும் காட்சி இன்னொரு அதிர்வெடி! மேஜர் சுந்தரராஜன் குரலில் திண்டுகல்
சரவணன் மிமிக்ரி செய்யும்போது சிரித்து சிரித்து கண்ணில் தண்ணி வந்துவிட்டது
போங்க. எதற்கெடுத்தாலும் மூதுரை அல்லது திருக்குறல் சொல்லும் சாம்ஸ், பழசான அவரை மாடர்னாக்கும் நாராயணன், சரவணன் மீனாட்சி ரஷிகா, வில்லன் ரேஞ்சுக்கு அறிமுகமாகி நல்லவராக மாறிவிடும் மாரிமுத்து என அத்தனை
கேரக்டர்களையுமே வெகு சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராதா மோகன்.
குமரவேலிடம் ராதா மோகனால் மட்டும்தான் இப்படியெல்லாம் நடிக்க வைக்க முடியும்
போலிருக்கிறது. இரண்டே நிமிடங்களில் தன் காதல் ப்ளாஷ்பேக்கைச் சொல்லி
கலங்கடிக்கிறார்.
எந்த வசனம் இந்த தலைமுறைக்குப் பிடிக்காது, மொக்கை என்று இயக்குநர் ஒதுக்கினாரோ, அந்த வசனத்தை நிஜத்தில் பயன்படுத்தி வாழ்க்கையை ஜெயிக்கும் அந்தப் பாத்திரம், சினிமாவை எவராலும் கணித்து எடுக்க முடியாது என்பதற்கு ஒரு சோறு பதம்! ராதா மோகனின் விறுவிறு திரைக்கதை, பொன் பார்த்திபன் வசனங்கள், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, ஜெய்யின் ஷார்ப் கட்... உப்புக் கருவாட்டை சுவையாக்கிய சமாச்சாரங்கள் இவைதான். இசை பெரிதாகக் கை கொடுக்கவில்லை. ஏன், அதை கவனிக்கக் கூடத் தோன்றவில்லை, அடுத்தடுத்து சரவெடியாய் வந்து கொண்டே இருக்கும் துணுக்குகளால். க்ளைமேக்ஸை முடித்தவிதம், ஏற்கெனவே தொன்னூறுகளில் பார்த்த சில படங்களை நினைவூட்டினாலும், இந்தப் படத்துக்கு அதுதான் பொருத்தம். லேசா உப்புக் கரிச்சாலும், டேஸ்ட் நல்லாருக்கு!

பாஜக நிர்வாகி கொலை வழக்கு, 9 பேரை கைது செய்து, மேலும் ஒருவரை தேடுகிறது காவல் துறை!!
பரமக்குடி அருகே நடந்த பாஜக நிர்வாகி கொலையில் மேலும்
இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கடந்த 23ம் தேதி இரவு பாஜக நிர்வாகி ரமேஷ்(29) வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கடந்த 23ம் தேதி இரவு பாஜக நிர்வாகி ரமேஷ்(29) வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பரமக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணனை முதலில் கைது
செய்தனர்.
தொடர்ந்து அவரது கார் டிரைவர் தேவராஜ், இவரது தந்தை வேலுச்சாமி, சுரேஷ், மகேந்திரன், ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த தவமணி ஆகியோரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரது கார் டிரைவர் தேவராஜ், இவரது தந்தை வேலுச்சாமி, சுரேஷ், மகேந்திரன், ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த தவமணி ஆகியோரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த பொன்னையாபுரம்
முனியாண்டி மகன் கருணாகரனை(21) பரமக்குடி போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றொருவரான அழகர் மகன் திருமுருகன்(21) நேற்று ராமநாதபுரம் ஜேஎம். 2: நடுவர் மன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார்
காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். பாலா என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுர இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!!
ராமநாதபுரம் நகரைச் சேர்ந்த அசரப்அலி என்ற இளைஞர் பல்வேறு
குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருந்ததால், அவரை குண்டர் தடுப்புச்
சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் நகர் சின்னக்கடைத் தெருவில் வசித்து வரும்
சித்திக் மகன் அசரப்அலி(22).
இவர் கடந்த 16.10.2015 ஆம் தேதி டாக்டர்.பாரூக் என்பவரை கத்தியால் குத்த முயன்று அவரது வீட்டில்
இருந்த பொருள்களையும் திருட முயன்றார். வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்
கொண்டதால் தப்பித்துக்கொண்ட டாக்டர்.பாரூக் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம்
பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அசரப்அலியை கைது செய்தனர்.
இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாலும், ஏற்கெனவே குற்ற வழக்கு ஒன்றில் ராமநாதபுரம் சிறையில் இருந்த போது
தப்பிச்சென்று மீண்டும் பிடிபட்டதாலும் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
செய்யலாம் என ராமநாதபுரம் எஸ்.பி. என்.மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய
உத்தரவிட்டார்.
இந்த உத்தரவினைத் தொடர்ந்து காவல்துறையினர் மதுரை மத்திய
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசரப்அலியிடம் அதற்கான உத்தரவை வழங்கியுள்ளனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரை பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை!!
கீழக்கரை பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க
வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரையில் 17 ஆண்டுகளுக்கு முன்
பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பகுதியைச் சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில் டாஸ்மாக்
மதுக்கடை உள்ளதால் அங்கு வருபவர்கள் இப்பகுதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறு
ஏற்படுத்துகின்றனர். இதனால் மாலை நேரங்களில் இந்த பகுதியில் பெண்கள் நடந்து செல்ல
அச்சப்படுகின்றனர்.
எனவே இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில்
பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
செய்தி: திரு.
தாஹிர்,
கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Thursday, November 26, 2015
பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரிடம் விசாரணை!!
பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து 5 பேரிடம் போலீஸார்
விசாரித்து வருகின்றனர்.
காளையார்கோவில் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான சி.ரமேஷ் (30) என்பவர் பரமக்குடியில் கோழி மொத்த வியாபாரக் கடை வைத்து நடத்தி வந்தார்.
இவர், திங்கள்கிழமை
புழுதிக்குளத்தில் உள்ள தனது மனைவி மற்றும் 4 மாத குழந்தையை
பார்ப்பதற்காக அவரது காரில் பரமக்குடியிலிருந்து சென்றுள்ளார். அப்போது அவரை
பின்தொடர்ந்து சென்ற மர்மநபர்கள் தென்பொதுவக்குடி காலனி பகுதியில் அவரை வெட்டிக்
கொலை செய்தனர். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக
கூலிப் படையைச் சேர்ந்த கும்பலை வைத்து சிலர் ரமேஷை கொலை செய்துள்ளனர் என்பது
தெரியவந்தது.
குற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும்
அவர்கள் தப்பிச் சென்ற காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கூலிப் படையினர் யாரிடம் பணம் பெற்றுக்கொண்டு இக்கொலையைச்
செய்தனர் என்பது குறித்து 5
பேரிடம் விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுர அறிவியல் நிலையத்தில் நவ-27ம் தேதி அன்று பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகள் பற்றிய பயிற்சி!!
ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை(நவ.27)
பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட
உணவுகள் பற்றிய இலவசப் பயிற்சி நடைபெற இருக்கிறது.
இது குறித்து, அறிவியல் நிலைய அலுவலகம்
வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெள்ளிக்கிழமை(நவ.27) பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகள் பற்றிய
பயிற்சியும்,
30 ஆம் தேதி சிறுதானியங்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட
உணவுப் பொருள்கள் பற்றிய பயிற்சியும் இலவசமாக நடத்தப்பட உள்ளது.
விருப்பமுள்ள
உழவர்கள்,
பெண்கள், சுயதொழில்முனைவோர்
கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள வயது வரம்பு
எதுவும் இல்லை.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர்,
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
வேளாண்மை அறிவியல்
நிலையம்,
கடலோர உழவர் ஆராய்ச்சி மையம்,
ராமநாதபுரம்-623503
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 04567-230250 மற்றும் 04567-232639
என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் திமுக நகர் கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்!!
ராமநாதபுரம் அரண்மனை முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
திமுக நகர் கிளை சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முறையாக
செயல்படுத்தாமல் இருப்பது,
நகரின் முக்கிய சாலைகளை பராமரிக்காமல் இருப்பது
உள்ளிட்டவற்றைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருவாடானை தொகுதி
சட்டப்பேரவை உறுப்பினர் சுப.தங்கவேலன் தலைமை வகித்தார்.
கட்சியின் மாவட்டச் செயலர் சுப.த.திவாகர் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா.ரகு, மாநில வர்த்தக அணி துணை
அமைப்பாளர் கிருபானந்தம்,
தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, இலக்கிய அணிச் செயலர் அரவரசன், தொமுச பேரவை மாவட்டச்
செயலர் மலைக்கண்ணு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்துகொண்டனர். நகர் செயலர் ஆர்.கே.கார்மேகம் வரவேற்றார்.
செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்க!!
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவம் மற்றும்
அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் வரவிருப்பதால் பொதுமக்கள் இந்த
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி
புதன்கிழமை கூறியதாவது:
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 600-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியன்
வெள்ளிக்கிழமையும்,
புற்றுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணர் ராஜ்குமார்
சனிக்கிழமையும் வருகின்றனர்.
சிறுநீரக அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்களான
இந்துஜா சனிக்கிழமையும்,
முரளீதரன் வெள்ளி,சனிக்கிழமை என இரு
நாள்களும் வருகின்றனர்.
உணவுக் குழாய் மருத்துவ சிகிச்சை நிபுணர் மருத்துவர்
சமீம்அகமது ஞாயிற்றுக்கிழமைதோறும் வருகிறார்.
உணவுக் குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்களான மருத்துவர்கள்
கண்ணன் வியாழக்கிழமைதோறும்,
சந்திரன் செவ்வாய்க்கிழமைதோறும்
ராமநாதபுரம் தலைமை அரசு
மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்குகின்றனர்.
தேவைப்படுவோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சையும்
செய்யப்படுவதால் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
என்றார் அவர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Wednesday, November 25, 2015
02.12.2015 புதன்கிழமை துபாய் ஜபீல் பூங்கா வில் ஈமான் சங்கத்தின் சார்பில் UAE 44 ஆவது தேசிய தின கொண்டாட்டம்!!
துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 44 ஆவது தேசிய தினம் 02.12.2015 புதன்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஸாபில் பூங்காவில் ( zabeel park – jaffilia metro அருகில் ) நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.
பூங்காவில் காலை 9.30 மணிக்குள் விளையாட்டில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்வில் குடும்பத்தினருடன் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன் அனுமதிச் சீட்டு பெறுவோர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
முன் அனுமதிச் சீட்டுகளை 15 திர்கம் கொடுத்து வாங்கி கொள்ளவும்( பார்க் கட்டணம் உள்பட)
பர்துபாய் : கும்பகோணம் சாதிக் 052
60 81 812
டி பிளாக் : காயல் ஈஸா 055 4063 711
தேரா :
லப்பைகுடிகாடு படேஷா பஷீர் 050 54 54 140
ஷமீம் : 050 938 47 46
ஷார்ஜா / அஜ்மான்
தேவகோட்டை அப்துல் ரசாக் : 055 41 45 068
முஹைதீன் அப்துல் காதர் : 050 658 93 05
கீழக்கரை ஹமீது யாசின் 050 475 3052
முதுவை ஹிதாயத் 050 51 96 433
டி பிளாக் : காயல் ஈஸா 055 4063 711
தேரா :
லப்பைகுடிகாடு படேஷா பஷீர் 050 54 54 140
ஷமீம் : 050 938 47 46
ஷார்ஜா / அஜ்மான்
தேவகோட்டை அப்துல் ரசாக் : 055 41 45 068
முஹைதீன் அப்துல் காதர் : 050 658 93 05
கீழக்கரை ஹமீது யாசின் 050 475 3052
முதுவை ஹிதாயத் 050 51 96 433
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.
செய்தி: திரு. பைசுர், துபாய்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
Tuesday, November 24, 2015
கீழக்கரை நகராட்சியை கண்டித்து தி.மு.க ஆர்பாட்டம்!!
கீழக்கரையில். கீழக்கரை நகராட்சி
நிர்வாகத்தை கண்டித்து இன்று 24.11.15 இந்து பஜாரில் தி.மு.க
ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன்,தலைமையில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் முன்னிலையில் மற்றும் நகர்
செயலாளர் பஷீர் அகமது,NPK
கென்னடி ஆகியோர் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை SI சிவசுப்பிரமணியன்
தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திரு. தாஹிர், கீழக்கரை