Sunday, October 25, 2015
ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு - TNPSC அறிவிப்பு!!
ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு
திட்டமிடல் சார்புநிலை சேவை பிரிவில் ஆராய்ச்சி உதவியாளர் (புள்ளியியல், பொருளாதாரம்,
நிலவியல்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு
டிசம்பர் 13-ஆம் தேதி காலை,
மாலை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்மந்தப்பட்ட
துறைகளில் முதல் அல்லது இரண்டாம் நிலையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700
என்ற விகிதத்தில் ஊதியம் இருக்கும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 ஆகும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம்
தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
http://tnpscexams.net
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இந்தப் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 4 ஆகும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment