Monday, October 12, 2015
ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர் பவனி!!
ராமநாதபுரத்தில்
புனித ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழா தேர் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
அன்னை ஆலயத்
திருவிழா அக்.2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 9 நாள்கள் மாலையில் நவநாள் திருப்பலியும், ஜெப மாலையும் நடைபெற்றது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான அன்னை தேர்பவனி
சனிக்கிழமை நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஜெபமாலை
அன்னையின் திருஉருவம் தாங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது.
முன்னதாக
தேர்பவனியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புத் திருப்பலிக்கு பாளையங்கோட்டை புனித
சவேரியார் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் முனைவர்.எல்.பிரான்சிஸ் சேவியர் தலைமை
வகித்தார். பங்குத்தந்தை ராஜ மாணிக்கம், உதவிப் பங்குத்தந்தை ஆரோக்கிய பிரிட்டோ
பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புத் திருப்பலியிலும், தேரோட்டத்திலும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
புனித ஜெபமாலை அன்னையின் ஆசி பெற்றனர்.
தேர் ஆலயம் வந்தடைந்ததும் மறைஉரை நிகழ்த்தி
ஆராதனையுடன் கொடியிறக்கம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை காலையில் திருவிழா
திருப்பலியும், அதனைத் தொடர்ந்து புதுநன்மை
திருப்பலியும், மாலையில் திருவிழா நிறைவுத்
திருப்பலியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குப்பேரவையினர், அன்பியங்கள், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment