Monday, October 5, 2015
ராமேஸ்வரத்தில் புதுடில்லி யாத்ரிகள் தாக்கப்பட்டனர், போலீஸ் விசாரணை!!
ராமேஸ்வரத்தில் வாடகை குறைத்து கொடுத்த
தகராறில் புதுடில்லி சுற்றுலா பயணிகளை வேன், ஆட்டோ டிரைவர்கள் தாக்கினர்.
புதுடில்லி ரயில் நிலைய ஊழியர் ரிஷிபால்,54.
இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று
ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தார்.
வேனில் 12 இடங்களை சுற்றி பார்க்க வாடகையாக ரூ. 1200
பேசினார். வேன் டிரைவர் 9 இடங்களை மட்டும் சுற்று காண்பித்துள்ளார். இதனால்
வாடகையில் ரூ.200யை குறைத்து
கொடுத்தார். இதனை வாங்க மறுத்த டிரைவர் அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.
ஆத்திரமடைந்த வேன் டிரைவர், ஆட்டோ டிரைவர்களுடன் சேர்ந்து ரிஷிபால் குடும்பத்தினரை
சரமாரியாக தாக்கினர். இதில் கவுசல்யா,40, ரோகித்,16, காயம் அடைந்தனர். இதுகுறித்து ராமேஸ்வரம் டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.
ரிஷிபால் கூறுகையில்,
""வேன் டிரைவர் கூறியபடி எங்களை அழைத்து
செல்லவில்லை. இதனால் வாடகையில் ரூ.200 குறைத்து கொடுத்தோம். இதனால் எங்களை தாக்கி விட்டனர்,'' என்றார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment