Saturday, October 31, 2015
கீழக்கரை அருகே வேன் கவிழ்ந்து விபத்து, ஒரு சிறுமி இறப்பு!!
கீழக்கரை அருகே புதன்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் ஒரு
சிறுமி உயிரிழந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
மைசூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த 35 பேர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி,
திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில்
உள்ள கோயில்களை தரிசிப்பதற்கு சுற்றுலா வேன் ஒன்றில் சில தினங்களுக்கு முன்
புறப்பட்டனர்.
சுற்றுலா வேனை ஜாபர்கான்(54) என்பவர்
ஓட்டிவந்தார். புதன்கிழமை நள்ளிரவு திருச்செந்தூரிலிருந்து ராமேஸ்வரம் கிழக்கு
கடற்கரை சாலையில் சிக்கல் அரசு மருத்துவமனை அருகே வந்த போது நிலை தடுமாறிய வேன்
தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த மைசூர் விஜயநகர் சீனிவாசமூர்த்தி
மகள் பூமிகா(9) படுகாயமடைந்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
உயிரிழந்தார்.
இவ்விபத்தில் காயமடைந்த 14 பேரும் ராமநாதபுரம் அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment