Sunday, October 25, 2015
ராமநாதபுர மாவட்டத்தில் பரவலாக நல்ல சாரல் மழை!!
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை முழுவதும் வானம்
மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி
இருப்பதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை
முழுவதும் வானம் மேக மூட்டத்துடனையே காணப்பட்டது. அதிகாலை மாலை முதல் இரவு வரை
தொடர்ந்து லேசான மழைத்தூறல் விழுந்து கொண்டே இருந்தது.
ஆனால், பாம்பனில் 11.80 மி.மீ,மண்டபத்தில் 31
மி.மீ,ராமேசுவரத்தில் 13.20 மி.மீ,தங்கச்சி மடத்தில் 2.80
மி.மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. மாவட்டத்தின் மொத்த
மழையளவு 58.மி.மீட்டராகும். சராசரி மழையளவு 3.68 மி.மீட்டராகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment