Saturday, October 24, 2015
மாநில அளவிலான தப்பாட்ட போட்டிக்கு ராமேசுவரம் மாணவிகள் தேர்வு!!
மாநில அளவிலான தப்பாட்ட போட்டிக்கு ராமேசுவரம் மாணவிகள்
தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பயிற்சி
மத்திய அரசு அழிந்துவரும் பாரம்பரிய விளையாட்டு, கலைகளை மீண்டும் உயிர்ப்பித்து கொண்டுவரும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் மாணவ– மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்க உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின்
உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு தப்பாட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் மத்திய
அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் மூலம் வருகிற 30–ந்தேதி,31–ந்தேதி மாநில அளவிலான தப்பாட்ட போட்டி கலா உற்சவ் என்ற தலைப்பில் நாமக்கல்லில்
நடக்கிறது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ–மாணவிகள் கலந்துகொள்கிறார்கள்.
இந்தநிலையில் மாநில அளவிலான தப்பாட்ட போட்டியில்
கலந்துகொள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த போட்டியில் ராமேசுவரத்தில் உள்ள தமிழக
அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல் பட்டு வரும்
எஸ்.பி.ஏ.அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 10 பேர் கொண்ட மாணவிகள் குழுவினர் வெற்றிபெற்று தேர்வாகி உள்ளனர். பள்ளி தாளாளர்
செல்வராஜ்,
உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், தலைமை ஆசிரியர் சந்திரா ஆகியோர் ஏற்பாட்டில் ராமேசுவரம் பள்ளி மாணவிகள் உடற்
கல்வி ஆசிரியை கோபிலட்சுமி தலைமையில் நாமக்கல் சென்று மாநில அளவிலான போட்டியில்
கலந்துகொள்கிறார்கள்.
பரிசுகள்
இதையொட்டி மாணவிகள் பள்ளியில் தப்பாட்ட பயிற்சியில்
தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மாணவிகளுக்கு ஓலைக்குடாவை சேர்ந்த தப்பாட்ட
பயிற்சியாளர் ஜெரோன்குமார்,
ஜோஸ்கஸ் ஆகியோர் தப்பாட்ட பயிற்சி அளித்து வருகின்றனர்.
மாநிலஅளவிலான போட்டியில் வெற்றி வெறும் பள்ளி டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான
போட்டிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள். தேசிய அளவிலான தப்பாட்ட போட்டியில்
வெற்றிபெறும் பள்ளிக்கு மத்திய அரசு மூலம் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
செய்தி: தினத்தந்தி
No comments :
Post a Comment