Wednesday, October 21, 2015
பெரியபட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் உண்ணாவிரதம்!!
பெரியபட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ.
கட்சியினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
பெரியபட்டினம் காயிதே மில்லத் திடலில் நடந்த உண்ணாவிரதத்துக்கு நகரத் துணைத் தலைவர்
முகம்மது மீராசா தலைமை வகித்தார். மாநில தொழிற்சங்கப் பொருளாளர் பி.கார்மேகம், மாவட்டத் தலைவர் எஸ்.செய்யது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியபட்டினம்
நகரச் செயலர் முகம்மது ஆசிக் வரவேற்றார்.
உண்ணாவிரதத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலர் பி.அப்துல்ஹமீது கோரிக்கைகளை வலியுறுத்தி
பேசினார்.
இதில்,பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்பட
வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்த அழுத்த மின்சாரத்தை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நகர் பொருளாளர் முகம்மது இஸ்மாயில் நன்றி கூறினார்.
செய்தி: தினசரிகள்
No comments :
Post a Comment