Tuesday, October 20, 2015
கீழக்கரையில் இருவருக்கு கத்தி குத்து, ஆட்டோ டிரைவர் கைது!!
கீழக்கரை அண்ணாநகரை சேர்ந்தவர்கள் முத்துக்
குமார், 22, முனியசாமி,
30. இருவரும் இருசக்கர வாகனத்தில் கீழக்கரை அருகே
சென்றபோது எதிரே வந்த ஆட்டோவில் மோதினர். இதனால் ஆட்டோ டிரைவர் கீழக்கரையை சேர்ந்த
வெற்றிவேலுக்கும், அவர்களுக்கும் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அவர்கள் கலைந்து சென்றனர்.
நேற்று காலை கீழக்கரை பஸ்ஸ்டாண்டில்
நின்று கொண்டிருந்த முத்துக்குமார், முனியசாமியை வெற்றி வேல் கத்தியால் குத்தினார். காயமடைந்த இருவரும்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
கீழக்கரை இன்ஸ்பெக்டர் ஆட்டோ டிரைவரை கைது செய்தார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment