(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 17, 2015

கீழக்கரையில் நடைபெற்ற அம்மா சிமெண்டு விற்பனை தொடக்க விழா!!

No comments :
கீழக்கரையில் அம்மா சிமெண்டு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.


கீழக்கரையில் அம்மா சிமெண்டு விற்பனை மையத்தில் சிமெண்டு விற்பனை தொடக்க விழா அமைச்சர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. அன்வர்ராஜா எம்.பி., மாவட்ட செயலாளர் தர்மர், கீழக்கரை நகரசபை தலைவர் ராபியத்துல் கதரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சங்கரலிங்கம் வரவேற்று பேசினார்.

விழாவில் அம்மா சிமெண்டு விற்பனையை அமைச்சர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:– 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையில் அம்மா சிமெண்டு விற்பனை 8–வது மையம் தொடங்கப்பட்டு உள்ளது. மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்கிறது. கீழக்கரையை தாலுகா தலைநகராக்கியவர் ஜெயலலிதா. அப்துல் கலாம் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி தினமாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். 298 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. 1 கோடியே 84 லட்சம் பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு உள்ளது. 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு பசுமைவீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 10,000–ம் நெசவாளர்களுக்கு வீடு கட்டி வழங்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள், கட்டிட தொழிலாளர்கள் நலனுக்காக வெளிமார்க்கெட்டில் ரூ.420–க்கு விற்கப்படும் சிமெண்டு ரூ.190–க்கு மலிவு விலையில் விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில் அன்வர்ராஜா எம்.பி. பேசும்போது

ஜெயலலிதாவின் மக்கள் நல சிறப்பு திட்டங்கள் அனைத்தும் பெரிய வெற்றிபெற்றுள்ளது. அந்த வரிசையில் அம்மா சிமெண்டு திட்டமும் வரவேற்பை பெற்றுள்ளது. சிமெண்டு விலை உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், மேலும் சிமெண்டு விலை உயராமல் தடுக்கவும் இந்த திட்டம் உதவுகிறது என்று தெரிவித்தார். விழாவில் நகரசபை துணைத்தலைவர் காஜாமைதீன், நகர் செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் முகைதீன் இபுராகீம், நகரசபை ஆணையாளர் மருது, நகர் பிரமுகர் அமீர் ரிஸ்வான், கவுன்சிலர் சுரேஷ், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் முனியாண்டி, நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணபாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment