(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 10, 2015

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி, கீழக்கரை இளைஞர் கைது!!

No comments :
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 4 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்த கீழக்கரையைச் சேர்ந்த இளைஞரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த அரைக்காசு ராவுத்தர் மகன் முகம்மது ஹனீபா. இவர், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதால், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீண் முத்துராஜ் ரூ. 1 லட்சமும் மற்றும் இவரது நண்பர்களான சரவணன் ரூ. 50 ஆயிரம், ராஜா மற்றும் ஜோதி ஆகியோர் தலா ரூ. 75 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 3 லட்சத்தை கொடுத்துள்ளனர்.   

துபை மனிதவள மேம்பாட்டுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இந்த 4 பேரது பாஸ்போர்ட்களையும் பெற்றுக் கொண்டாராம். இந்நிலையில், வேலையும் வாங்கித் தராமல், பாஸ்போர்ட்களையும் திரும்பத் தராமல் முகம்மது ஹனீபா இழுத்தடித்துள்ளார்.


இது குறித்து பிரவீண் முத்துராஜ், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரன் வழக்குப் பதிந்து, முகம்மது ஹனீபாவை கைது செய்து விசாரித்து வருகிறார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment