Sunday, October 18, 2015
ராமநாதபுர வணிக வளாகத்தில் தீ விபத்து, ரூ.5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!!
ராமநாதபுரம் கைக்கொள்வார் தெருவில் உள்ள வெளிநாட்டுப்
பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் சனிக்கிழமை அதிகாலையில் மின்கசிவு காரணமாக
ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருபவர் ரகுமத்துல்லா.
இவர் வழக்கம் போல வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு சென்று விட்டார்.
சனிக்கிழமை அதிகாலையில் கடை தீப்பிடித்து புகை வருவதை பார்த்த சிலர்
தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய காவலர்கள் சம்பவ
இடத்துக்கு வந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீயில் ரூ.5
லட்சம் அளவுக்கு பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என
கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என காவல்துறையினர்
தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் ரகுமத்துல்லாவிடம்
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment