Tuesday, October 20, 2015
கீழக்கரையில் அதிமுக 44வது ஆண்டு துவக்க விழா!!
அதிமுக 44வது ஆண்டு துவக்க விழா கீழக்கரையில் சிறப்பாக நடைபெற்றது.
தலைமைக்கழக பேச்சாளர், திருமதி. மெஹர் தாஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் அதிமுகவின் நலத்திட்டங்கள் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.
விழாவில், நகர்மன்ற தலைவி திருமதி. ராபியத்துல் காதிரிய்யா, திரு. ரிஸ்வான், நகர் செயலாளர் திரு.இராஜேந்திரன், கிளைச்செயலாளர் திரு.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை அதிமுக இளைஞரணி செயலாளர் திரு. இம்பாலா சுல்தான் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.
No comments :
Post a Comment