Monday, October 12, 2015
ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது!!
ராமநாதபுரம்
மாவட்டத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கீழக்கரையில்
கடந்த ஜூலை 30-ஆம் தேதி வங்கி ஒன்றில் செலுத்த வந்த
பணத்தில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த
சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிக்க, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
மயில்வாகனன் உத்தரவின் பேரில், கீழக்கரை உட்கோட்ட காவல் துணை
கண்காணிப்பாளர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை
மேற்கொண்டனர்.
இந்த
விசாரணையில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சாவை கடத்திச்
சென்று கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக வெளிநாட்டில்
அச்சடிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை கொண்டு வந்து புழக்கத்தில் விட்டது
தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, பாம்பன் ராஜரெத்தினம் மகன் வெனிட்டன்(31),
தூத்துக்குடி
திரேஸ்புரம் மோடசம்பிரிஸ் மகன் அந்தோணி(37),
பாம்பன்
தெற்குத்தெரு முகம்மது மீராசா மகன் முஹம்மதுநாசர்(27)
ஆகிய மூவரையும்
கைது செய்து, அவர்களிடமிருந்து ஆயிரம் ரூபாய்
கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment