Wednesday, October 14, 2015
அக்.15 ம் தேதி அன்று ராமேசுவரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் விஜயகாந்த்!!
ராமேசுவரத்தில் வியாழக்கிழமை (அக்.15) நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்
பங்கேற்கிறார்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட செயலர் சிங்கை சின்னா
கூறியது: ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம்
மக்களுக்காக மக்கள் பணித்திட்ட பொதுக்கூட்டம் வியாழக்கிழமை(அக்.15) நடைபெற உள்ளது.
இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்று, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி உள்ளிட்ட
பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறார் என்றார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment