(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 10, 2015

அக்டோபர் 15, 16 தேதிகளில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகள் ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது!!

No comments :
மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகள் அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளிலும் நடைபெற இருப்பதாக, ஆட்சியர் க. நந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டுத் துறையும், பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து, மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகளை நடத்துகின்றன.

இதை, அக்டோபர் 15 ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கும், 16 ஆம் தேதி பள்ளி மாணவியருக்கும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகள், காலை 8 மணி முதல் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறும்.   6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு மட்டும் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கு பெறுவோர், பள்ளியில் படிப்பதற்கான சான்றை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று வரவேண்டும்.  மேலும், பள்ளிச் சீருடையில் வரவேண்டும். இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.

முதல் 2 இடங்களைப் பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், வரும் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பெயர்களை, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.


மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017-03509 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment