Wednesday, September 2, 2015
ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம், புதிய பேருந்து நிலையம் மற்றும் இரண்டு நகராட்சி பள்ளிகளில் R.O.பிளாண்ட்!!
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம்
மற்றும் இரண்டு நகராட்சி பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
(ஆர்.ஓ.பிளாண்ட்) அமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சந்தானலெட்சுமி தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத்தலைவர் கவிதா, நகராட்சி கமிஷனர்
முகம்மது சிராஜ் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி ஊரணிகளான சாயக்கார ஊரணி, கொடலைக்கார ஊரணி, குண்டூரணி, கருவேப்பிலைக்கார ஊரணி, வண்ணார் ஊரணி
மற்றும் நீலகண்டி ஊரணிகள் தூர்வாரப்பட்டுள்ளதால், ஊரணிகளை சுற்றி தடுப்பு வேலி அமைப்பதற்கும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ்
இந்திரா நகரில் வீடற்றவர்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டவும், நகராட்சி வள்ளல்பாரி நடுநிலைப் பள்ளியில் ரூ.5.75
லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட
வகுப்பறை கட்டிடத்தில் கம்ப்யூட்டர் புரொஜெக்டர், மாணவர்கள் படிக்க திறந்தவெளி அரங்கம் அமைக்கவும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நகராட்சி வள்ளல்பாரி நடுநிலைப் பள்ளி, எம்.எஸ்.கே தொடக்கப் பள்ளி, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் குடிநீர் சுத்திகரிப்புநிலையம் (ஆர்.ஓ.பிளாண்ட்) ரூ.6.50 லட்சம் செலவில் அமைக்கவும் மற்றும் நகராட்சி பகுதியில் பொது சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சிப் பணிகள், நகராட்சி பணிகளுக்கு ஆட்கள் நியமனம், நகராட்சி வாகனங்கள் பழுது நீக்குதல், குப்பை அள்ள வாகனங்கள் அமர்த்துதல் உள்ளிட்ட 86 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 27வது வார்டு கவுன்சிலர் தனசேகரன் (அதிமுக), சந்தைப்பேட்டை வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் தளம்
அமைத்தல் பணி, புதிய பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை மராமத்து பணிகள் உள்ளிட்ட சில பணிகளுக்கு மன்ற அனுமதி பெறுவதற்கு முன்பே, நகராட்சி தலைவரின் முன் அனுமதியடன் முன்கூட்டியே ஒப்பந்தப்புள்ளி கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
2வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார்(சுயேட்சை), புதிய பேருந்து நிலையம், நகராட்சி பள்ளிகளில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட சில
பணிகளுக்கு மன்ற அனுமதி பெறுவதற்கு முன்பே, முன்கூட்டியே நகராட்சி தலைவரின் முன் அனுமதியடன் ஒப்பந்தப்புள்ளி கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இதற்கு அதிமுக கவுன்சிலர் சீனிவாசன் பதிலளித்தார், நகராட்சி அதிகாரிகள்தான் பதில் தெரிவிக்க வேண்டும். கவுன்சிலர் பதில் தெரிவிக்கக் கூடாது என செந்தில்குமார் தெரிவித்தார்.
அதனால் கூட்டத்தில் சற்றுநேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலர் சீனிவாசன், நகராட்சி பகுதிகளில்
அதிகமானோர் மின் மோட்டார் வைத்து குடிநீர் திருடுகின்றனர். இதனால் பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் வருவதில்லை நடவடிக்கை எடுக்க வேண்டும்’
என்றார்.நகராட்சி கமிஷனர், மின்மோட்டாரை பயன்படுத்தக் கூடாது எனவும், மீறிபயன்படுத்துவோரது மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என செய்தித் தாள்களில் அறிவிக்கை செய்யப்படும். அதனைத் தொடர்ந்து திடீர் சோதனை செய்து மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும்’ என்றார்.
செய்தி: தினசரிகள் வழி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment