Tuesday, September 22, 2015
பரமக்குடியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கோஷ்டி தகராறில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு!!
பரமக்குடியில்
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் இரு கோஷ்டியினர் மோதிக்
கொண்டதில், வீடு புகுந்து தாக்கப்பட்டு காயமடைந்த
ஒருவர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பரமக்குடியில் கடந்த செப் 18ஆம் தேதி நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டு விட்டு, திரும்பி வந்த போது மாதவன் நகர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனி (38) தரப்பினரும், சந்தைக்கடைத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம்
மகன் சுரேஷ் தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
இதில் சுரேஷ் தரப்பைச் சேர்ந்த சந்துரு, விக்னேஷ் ஆகிய இருவரையும் பழனி தாக்கினாராம். இதில் காயமுற்ற அவர்கள் இருவரும்
பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையறிந்த சுரேஷ் கோஷ்டியினர் அன்று இரவே
பழனியின் வீட்டுக்குச் சென்று பழனி மற்றும் அவரது தந்தை ராமசாமி ஆகியோரை
தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பழனி, பரமக்குடி அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி
திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து பரமக்குடி நகர் காவல்
நிலையத்தில் ராமசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்
பதிந்து விசாரித்து வருகிறார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment