Monday, September 14, 2015
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது!!
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற விழாவில்
அமைச்சர் சுந்தர்ராஜன் கலந்து கொண்டு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. மருத்துவ துணை இயக்குனர் பவானி உமாதேவி வரவேற்று பேசினார். அன்வர்ராஜா எம்.பி., முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. மருத்துவ துணை இயக்குனர் பவானி உமாதேவி வரவேற்று பேசினார். அன்வர்ராஜா எம்.பி., முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவுக்கு அமைச்சர்
சுந்தர்ராஜன் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கினார். பின்னர்
அவர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா குழந்தைகள் நல பரிசு
பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் அரசு
மருத்துவமனைகள்,
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசால் நடத்தப்படும்
மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு பெட்டகம்
வழங்கப்படும். இந்த பெட்டகத்தில் குழந்தையை பராமரிப்பதற்கான துண்டு, குழந்தை பாதுகாப்பு வலை, நாப்கின், கைகழுவும் திரவம்,
குழந்தை உடை, படுக்கை, பராமரிப்பு எண்ணெய் மற்றும் சாம்பு, நகவெட்டி, பொம்மை மற்றும் கிலுகிலுப்பை, சோப்புகள், சோப்பு பெட்டி,
தாய்மார்களுக்கான சவுபாக்கிய சுண்டி லேகியம் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 57 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 அரசு ஆஸ்பத்திரிகளில் ஒவ்வொரு வருடமும் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறுவார்கள். இந்தியாவிலேயே பிரசவத்தின் போது குழந்தை இறப்பு விகிதம் மிகவும் குறைவான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 1000-க்கு 42 ஆக உள்ளது. இது தமிழகத்தை பொறுத்தவரை 1000-க்கு 21ஆக உள்ளது. குழந்தை கருவுற்றது முதல் பிறப்பு வரை தமிழக அரசு ஒவ்வொரு தாய்மாருக்கும் ரூ.12,000 வழங்கி வருகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.5 கோடி செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகள் மூலம் ரூ.11 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 108 அவசர சிகிச்சை ஊர்திகளின் எண்ணிக்கை 406-ல் இருந்து 756 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் 50 வாகனங்கள் வாங்கப்பட உள்ளது. சென்னையில் தொடங் கப்பட்டுள்ள அம்மா உடல் பரிசோதனை திட்டம் விரைவில் அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், நகரசபை தலைவர் சந்தானலட்சுமி, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தர்மர், ராமநாதபுரம் யூனியன் தலைவர் சாந்தி சாத்தையா, நகரசபை துணை தலைவர் கவிதா சசிக்குமார், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, நகர் அ.தி.மு.க. பிரமுகர் செல்வராஜ், ராம்கோ துணை தலைவர் சுரேஷ், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், உதவி அதிகாரி மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment