Saturday, September 26, 2015
கீழக்கரையில் சொந்த வீடு கேட்டு மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது வழக்கு!!
கீழக்கரையில் சொந்த வீடு கேட்டு மனைவியுடன் சேர்ந்து வாழ
மறுத்த கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது, போலீஸார் புதன்கிழமை
வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கீழக்கரை கஸ்டம்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது மகள்
அப்ரோஸ் சஜானா (25).
இவருக்கும், கீழக்கரையைச் சேர்ந்த
ரிபாக் அகமது என்பவருக்கும், கடந்த ஆண்டு திருமணம்
நடந்தது. இவர்கள்,
தற்போது ராமநாதபுரம் விவேகானந்தர் தெருவில் வசித்து
வருகிறார். திருமணமாகி 40
நாள்கள் மட்டுமே ஆன நிலையில், ரிபாக் அகமது வெளிநாடு சென்றுவிட்டாராம். அதன்பின்னர், மனைவியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார்.
இது குறித்து கேட்டதற்கு, சேர்ந்து வாழ விரும்பினால் சொந்தமாக வீடு எழுதி வாங்கி வருமாறு ரிபாக் அகமது
தெரிவித்தாராம்.
இதற்கு,
அவரது தாய் சல்கத் சபிக்கா, இஸ்ரா அகமது மற்றும் உறவினர்கள் அம்சத் நிகியா, நூகு,
சபர் பாத்திமா, லத்திபா, மக்சதீன் ஆகியோரும் உடந்தையாக இருந்தனராம். இதனால், மனம் உடைந்த அப்ரோஸ் சஜானா கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்
செய்தார். காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி வழக்குப் பதிந்து விசாரித்து
வருகிறார்.
செய்தி:
தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment