Thursday, September 17, 2015
ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் கோயில்களில் அரசின் அன்னதானத்திட்டம் தொடக்கம்.!!
ராமேசுவரம் திருக்கோயிலின் உப கோயில்கள் மற்றும்
ராமநாதபுரம் தர்மதாவள விநாயகர் கோயிலில் அரசின் அன்னதானத்திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
திருக்கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு
அன்னதானம் திட்டத்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சிறு
கோயில்களிலும் அன்னதானம் திட்டத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
அதன்பேரில் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயில்களான நம்புநாயகி
அம்மன் மற்றும் லெட்சுமணன் தீர்த்தம் ஆகிய கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இரு கோயில்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்து அன்னதானத்தை தொடக்கி
வைத்தார்.
நிகழ்ச்சியில் திருக்கோயில் மேலாளர் லெட்சுமிமாலா, உதவிக்கோட்டபொறியாளர் மயில்வாகனன், இணை ஆணையரின் நேர்முக
உதவியாளர் கமலநாதன் மற்றும் அலுவலர்கள் செல்லம், துரை மற்றும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் தர்மதாவள விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற
நிரந்தர அன்னதானத் திட்ட தொடக்க விழாவுக்கு ஆயிரவைசிய மகாஜன சபைத் தலைவர்
எம்.எஸ்.கேசவன் தலைமை வகித்தார். செயல் தலைவர் என்.ஏ.வாசுதேவன், கோயில் அறங்காவலர் ரவிக்குமார், ஆயிரவைசிய சபையின்
பொதுச்செயலர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் தேவஸ்தான
நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார் வரவேற்றார். விழாவில் அன்னதானத்தை ராமநாதபுரம்
நகர்மன்றத் தலைவர் எஸ்.சந்தானலெட்சுமி தொடக்கி வைத்தார். விழாவில் அறநிலையத்துறை
ஆய்வாளர் சுந்தரேசுவரி,
அரிமா சங்கத் தலைவர் ஆர்.வெங்கடாஜலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment