Saturday, September 26, 2015
கீழக்கரை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில், வியாழக்கிழமை இரவு லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழப்பு, லாரி ஓட்டுநர் கைது!!
கீழக்கரை அருகே ஏர்வாடி கிழக்குக் கடற்கரைச் சாலையில், வியாழக்கிழமை இரவு லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சேலம் வீரபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (24).
இவர்,
ராமநாதபுரம் நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளார். அந்தக்
காரில் 14
பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, ஏர்வாடி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள குடியிருப்பு அருகே லாரி மீது கார்
மோதியது. இதில்,
கார் ஓட்டுநர் பிரதீப்குமார் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த பிரதீப்குமாரை மேல்சிகிச்சைக்காக
மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து,
வாலிநோக்கம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்த கப்படையார்
மகன் ரகுமத் அலி அளித்த புகாரின்பேரில், ஏர்வாடி காவல் ஆய்வாளர்
பால்பாண்டி,
சார்பு-ஆய்வாளர் ராஜன் ஆகியோர் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் காரைக்காலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சுவாமிநாதன் (47) என்பவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment