Monday, September 28, 2015
பாம்பன் ரெயில்பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது!!
பாம்பன் ரெயில்பால தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு ராமேசுவரம்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு 8.30 மணிக்கு பாம்பன் ரெயில் பாலத்தை அடைந்தது.
ரெயில் தூக்குபாலத்தில் சென்றபோது தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், அரவிந்தன், மாவட்ட இளைஞர்பாசறை செயலாளர் கதிரவன், சிவங்கையை சேர்ந்த காளிஸ்வரன், சரவணன் ஆகிய 5 பேர் கட்சிகொடியுடன் ரெயில்பால பக்கவாட்டு நடைபாதை பகுதியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரெயில் கடந்து சென்றதும் தண்டவாளத்தில் படுத்து கட்சி கொடியுடன் இலங்கை போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி உள்நாட்டிலேயே விசாரணைக்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டுனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாம்பன் போலீஸ் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்டின், ஏட்டு சூசைமாணிக்கம் ஆகியோர் விரைந்து சென்று 5 பேரையும் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment