(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 9, 2015

இமானுவேல் சேகரன் தினத்தையொட்டி பரமகுடியில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு!!

No comments :
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி தினத்தையொட்டி சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு அஞ்சலி நாளை மறுநாள் (செப்.11)  நடக்க உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிலையில், குருபூஜை விழாக்களில் வன்முறைகளை தடுக்க கடந்த 2 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. 


இதேபோல் இந்தாண்டும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரில் மாற்று சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் இடங்களுக்குள் அஞ்சலி செலுத்த வருபவர்கள் செல்ல அனுமதி கிடையாது.

வரையறுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வர வேண்டும். வாடகை வாகனங்களில் வர அனுமதி கிடையாது. பிளக்ஸ் போர்டு வைப்பவர்கள் காவல்துறையின் முன் அனுமதி பெற வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.


இதையடுத்து பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி வந்துள்ளது.  சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment