Saturday, September 26, 2015
பனைக்குளத்தில் தங்கையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.35.70 லட்சம் திருடிய சகோதரர் தலைமறைவு!!
பனைக்குளத்தில் தங்கையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 35.70 லட்சத்தை திருடிய அண்ணனை, போலீஸார் தேடி
வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே புதுவலசை கிராமத்தில் கிழக்குத் தெருவில் வசிப்பவர்
இப்ராகிம் ஷா என்பவரின் மனைவி பாத்திமா ரிஸ்வானா செய்யது. இவரது மூத்த சகோதரர்
நல்ல இப்ராஹிமும் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
பாத்திமா ரிஸ்வானா பனைக்குளத்தில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் கணக்கு
வைத்துள்ளார். இந்த வங்கிக் கணக்கிலிருந்து பாத்திமா ரிஸ்வானாவுக்கு தெரியாமல் ரூ.35 லட்சத்து 70
ஆயிரத்தை நல்ல இப்ராஹிம் கடந்த 3.1.2014 ஆம் தேதி எடுத்துள்ளார்.
இதையறிந்த ரிஸ்வானா, தனது சகோதரரிடம் பலமுறை
அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டும் அவர் தரவில்லையாம். இதனால், ரிஸ்வானா ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் புகார்
செய்தார்.
அவரது உத்தரவின்பேரில், ராமநாதபுரம் மாவட்டக்
குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். நல்ல
இப்ராஹிம் தலைமறைவானதை அடுத்து, அவரைத் தேடி வருகின்றனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment