Tuesday, September 8, 2015
10th +2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தனித்தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!!
செப்., அக்., 2016 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள்
"தக்கல்'
திட்டத்தில் அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் மட்டும்
செப்.,
10, 11ல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
திருநெல்வேலி, மதுரை, கோவை,
திருச்சி, வேலூர், கடலூர்,
சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களில் தலைமையிடத்தில் தலா 2 தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வெழுத முடியும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் ரூ.125, சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500 மற்றும் ஆன்லைன் பதிவு
கட்டணம் ரூ.100
செலுத்த வேண்டும். "ஹால் டிக்கெட்'டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
செப்., அக்., 2016 பிளஸ் 2
துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள்
அரசு தேர்வு துறை சேவை மையங்களில் செப்., 9, 10ல் ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம், இதர கட்டணங்களுடன்
சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000 மற்றும் ஆன்லைன் பதிவு
கட்டணம் ரூ.50
ஐ அரசுத்துறை தேர்வு மையத்தில் செலுத்த வேண்டும்.
"ஹால் டிக்கெட்'டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
"தக்கல்' திட்டத்தில் பிளஸ் 2 தனித்தேர்வர்கள் சென்னையில் மட்டுமே தேர்வு எழுத
முடியும், என ராமநாதபுரம்
முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment