முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 30, 2015

திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் "நமக்கு நாமே” ராமநாதபுர மாவட்ட சுற்றுப்பயண அறிக்கை மற்றும் படங்கள்!!

No comments :
"நமக்கு நாமே”  ராமநாதபுர மாவட்ட சுற்றுப்பயணத்தினை பற்றி திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிக்கை பின்வருமாரு:

மதிப்புக்கும், மேன்மைக்கும் உரிய பல பெரியோர்கள் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், "நமக்கு நாமே" பயணத்தின் 11வது நாளாக இன்று கால்பதித்தேன். நமது அன்புக்குரிய மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள், தமிழக அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மற்றும் தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடியவரும், சாதீய சீர்திருத்தவாதியுமான இம்மானுவல் சேகரன் போன்ற பல சிந்தனாவாதிகள் பிறந்த மண் இது. மக்களின் நலனுக்காக போராடிய இத்தகைய தலைவர்களை நினைவு கூர்வதிலும், மரியாதை செலுத்துவதிலும் நான் மிகுந்த உவகை அடைகிறேன்.






தொடர்ந்து, நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருடன் பரமக்குடியில் நடைபெற்ற சுவாரசியமானதொரு கலந்துரையாடலில் பங்கேற்றேன். பட்டு சந்தை விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், பட்டு தொழிலின் உற்பத்தி பொருட்களுக்கு ஏற்ற வகையில் சந்தை முறைபடுத்தப்படாதது போன்ற சில காரணங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்பதே நெசவாளர்களால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் முக்கிய குற்றச்சாட்டு.

சிவப்பு மிளகாய் விவசாயத்திற்கு இந்திய அளவில் பெயர்பெற்ற இப்பகுதியை சேர்ந்த மிளகாய் விவசாயிகள், அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளால் பயிர் காப்பீடு பெறுவதில் விவசாயிகளுக்கு இன்று உள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களை பட்டியலிடுவதோடு, கடந்த திமுக ஆட்சி காலங்களில் பயிர் காப்பீடு வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையும், பூச்சி மருந்து மற்றும் உரங்களுக்கான மானியங்கள் முறையாக வழங்கப்பட்ட விவரங்களையும் இன்றுவரை நினைவு கூர்கின்றனர்.

பொதுவாக அனைத்து தரப்பு விவசாயிகளும் நமது முன் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் நீர் தேக்கங்கள் மற்றும் பாசன வாய்கால்கள் அனைத்தும் அவ்வப்போது தூர் வார அரசுத்தரப்பு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே. அவர்களுடைய கோரிக்கையின் அடிப்படையை புரிந்து கொண்ட நான், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற வகையிலான தண்ணீர் மேலாண்மை கொள்கையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் இனி வரும் காலங்களில் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறைக்கு உள்ளாகாதவாறு உரிய நடவடிக்கைகளை தி.மு.கழகம் மேற்கொள்ளும் என அவர்களுக்கு உறுதி அளித்தேன்.


இவ்வாறு தன் முகநூல் பக்கம் மூலம் தெரிவித்தார் திரு.முக.ஸ்டாலின்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

எஸ் IAS அகடமி நடத்தும் IAS /IPS பயிற்சி முகாம், அக்டோபர் 15ம் தேதி துவங்குகிறது!!

No comments :


எஸ் IAS அகடமி நடத்தும் IAS /IPS பயிற்சி முகாம், அக்டோபர் 15ம் தேதி துவங்குகிறது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

சென்னை பல்கலைகழகத்தில், வேலைவாய்ப்பு முகாம், அக்., 3ம் தேதி நடக்கிறது!!

No comments :
சென்னை பல்கலையில், வேலைவாய்ப்பு முகாம், அக்., 3ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து, பல்கலை வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த, 2013 முதல், 2015க்குள் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கான, வேலைவாய்ப்பு முகாம், வரும், 3ம் தேதி பல்கலை வளாகத்தில் நடக்கிறது. ‘டெக்ரூட்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பல்வேறு தொழில் நிறுவனங்களில் உள்ள, 1,200 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.



முகாம் நடக்கும் இடத்தில், பெயர், முகவரியை பதிவு செய்ய வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு, 9551690630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்வு: திரு. தாஹீர், சென்னை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் வேலை வாய்ப்பு முகாம், அக்டோபர் 10ம் தேதி நடக்கிறது!!

1 comment :

கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அக்.10 இல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் அக். 10 ஆம் தேதி ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதால் படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இதுபற்றி மேலும் தகவல் அறிய விரும்புவோர் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பல்நோக்கு பயிற்சி மற்றும் உற்பத்தி மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியிலோ அல்லது d‌p‌i‌u‌r‌m‌d@‌ya‌h‌o‌o.c‌o‌m என்ற மின்னஞ்சல் மற்றும் 04567-231341 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, September 28, 2015

புதன்கிழமை (செப்.30) ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின்!!

No comments :
ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின் வரும் புதன்கிழமை (செப்.30) பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் புதன்கிழமை காலை 8 மணிக்கு பரமக்குடி நகர் எமனேசுவரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் சன்னதி வாசலில் நெசவாளர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் பரமக்குடியில் முக்கிய கடை வீதிகளில் மக்களிடம் குறைகளை கேட்கிறார்.


இதனையடுத்து மிளகாய் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பாக வாகனத்தில் இருந்தபடியே பேசுகிறார். பின்னர் அங்கிருந்து ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் கலாம் வீட்டில் அவரது உறவினர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் ராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர்களை சந்தித்து பேசுகிறார்.


பகலில் ராமேசுவரம் தீவு பாம்பன் தெற்குவாடி பகுதியில் மீனவர்களை சந்தித்து பேசுகிறார். இதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பரக்கத் மகாலில் மாணவர்களோடும் அதன் பின்னர் முக்கியப் பிரமுகர்களோடும் கலந்துரையாடுகிறார்.

மாலையில் அரண்மனை கடை வீதியில் பொதுமக்களயும், வியாபாரிகளையும் சந்திக்கிறார். மாலை 6 மணியளவில் திருவாடானையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இரவு 8 மணிக்கு தொண்டியில் கடைத்தெருவில் மக்களை சந்தித்து பேசிவிட்டு புதுக்கோட்டை மாவட்டத்துக் செல்வதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி: தினமணி


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாம்பன் ரெயில்பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது!!

No comments :

பாம்பன் ரெயில்பால தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மணிக்கு ராமேசுவரம்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு 8.30 மணிக்கு பாம்பன் ரெயில் பாலத்தை அடைந்தது. 




ரெயில் தூக்குபாலத்தில் சென்றபோது தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், அரவிந்தன், மாவட்ட இளைஞர்பாசறை செயலாளர் கதிரவன், சிவங்கையை சேர்ந்த காளிஸ்வரன், சரவணன் ஆகிய 5 பேர் கட்சிகொடியுடன் ரெயில்பால பக்கவாட்டு நடைபாதை பகுதியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரெயில் கடந்து சென்றதும் தண்டவாளத்தில் படுத்து கட்சி கொடியுடன் இலங்கை போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி உள்நாட்டிலேயே விசாரணைக்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டுனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த பாம்பன் போலீஸ் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்டின், ஏட்டு சூசைமாணிக்கம் ஆகியோர் விரைந்து சென்று 5 பேரையும் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, September 27, 2015

இராமநாதபுரத்தில் இன்று( செப்-27) நல்ல மழை!!

No comments :
இராமநாதபுரத்தில் இன்று( செப்-27) நல்ல மழை பொழிந்தது. கடும் வெயிலில் வரண்டுகிடந்த நிலங்கள் நனைந்தன, மக்கள் மனம் மகிழ்ந்தன. தொடர்ச்சியான மழை வேண்டி மனங்கள் பிராத்தித்தன.





(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

மலேசியாவில் இன்று 27/09/215 நடைபெற்ற இந்தியன் முஸ்லிம் குடும்ப தின பெரு விழா...(படங்கள்)

No comments :
மலேசியாவில் இன்று 27/09/215 நடைபெற்ற இந்தியன் முஸ்லிம் குடும்ப தின பெரு விழா...(படங்கள்).

இந்த வருடத்திற்கான 
இந்தியன் முஸ்லிம் குடும்ப தின பெரு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டு பரஸ்பர அன்பைப்பகிர்ந்து கொண்டு பொழுதை இனிதே கழித்தனர்.

விளையாட்டுப்போட்டிகள், இரத்ததானம், உணவு “கார்னிவல்” ஆகிய்வை ஏற்பாடு செய்யப்பட்டு இனிதாக நடைபெற்றது விழா.











செய்தி மற்றும் படங்கள்: திரு. அஸ்கர் அலி மற்றும் சித்தி நிஹாரா, மலேசியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கிருமி - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
காவல் துறையின் பச்சோந்தித் தனத்தைத் தோலுரித்துக் காடும் படம் கிருமி. கதிர் (மதயானைக் கூட்டம்கதிர்) வேலை யில்லாத, ஆனால் மணமாகிக் குழந்தை யுள்ள இளைஞன். வீட்டுக்கு எப்போதா வது வரும் அவன் நண்பர்களுடன் அறையில் தங்கிப் பொழுதைப் போக்குகிறான். குடி, சீட்டாட்டம் என நகர்கிறது அவன் வாழ்க்கை. போலீஸ் இன்ஃபார்மர் பிரபாகரன் (சார்லி) கதிர் மீது பிரியம் கொண்டவர். கதிரும் பிரபாகரன் உதவியுடன் போலீஸ் இன்ஃபார்மராக மாறுகிறான்.

இது பொருளாதார ரீதியாக அவனை உயர்த்துகிறது. ஆனால் முன்னெச் சரிக்கையின்றி அவன் செய்யும் சில காரியங்கள் அவனைச் சிக்கலில் மாட்டி விடுகின்றன. காவல் துறை ஆய்வாளர் கள் இருவருக்கு நடுவே நடக்கும் பனிப் போரிலும் அவன் மாட்டிக்கொள் கிறான். இந்தச் சிக்கல்களிலிருந்து அவன் தப்பித்தானா என்பதே கதை.
திரைக்கதையை இயக்குநர் அனு சரணும் காக்கா முட்டைஇயக்கு நர் மணிகண்டனும் சேர்ந்து எழுதியிருக் கிறார்கள். புதிய களமும் புதிய காட்சி களும் படத்தின் பலம். காவல் துறை இன்ஃபார்மர்களின் உலகம் தமிழ்த் திரையில் முதல் முறையாகக் காட்டப் படுகிறது.


காவல்துறையின் அழுக்கு களை அப்பட்டமாக்கியிருக்கிறது கிருமி. சட்ட விரோத நடவடிக்கை களுக்கு காவல்துறை அதிகாரிகள் துணைபோவது, துறைக்குள் நடக்கும் பனிப்போர்கள், துறைக்குள் நடக்கும் விசாரணை, இன்ஃபார்மர்களை அவர் கள் பயனபடுத்திக்கொள்ளும் விதம் ஆகியவை மிகவும் தத்ரூபமாகக் காட்டப்படுகின்றன. காவல் துறையின் சந்தர்ப்பவாதமும் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

பாத்திர வார்ப்பில் இயக்குநர் மிக வும் கவனம் எடுத்துக்கொண்டிருக் கிறார். போலீஸாரின் குணநலன்களை அனுபவத்தால் அறிந்த காரணத்தால் அவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்ற நாசூக்கு பிரபாகரனுக்குத் தெரிந்திருக்கிறது. அளவாகப் பேசுகிறார். எல்லாவற்றிலும் நிதானம் காட்டுகிறார். இள ரத்தம் என்பதால் கதிருக்கு இந்த நிதானம் இல்லை. அதனால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். இரண்டு ஆய்வாளர் களின் இயல்பு, நடத்தை ஆகியவற்றி லும் இதே துல்லியம் வெளிப்படுகிறது.

ரெய்டு செய்த பிறகு சுந்தர பாண்டி யனுக்கும் மதியரசுவுக்கும் இடையே நடக்கும் உரையாடலும் உயர் அதிகாரி இவர்கள் இருவரிடமும் பேசும் வார்த்தைகளும் வசனத்தின் வலிமை யைப் பறைசாற்றுகின்றன. பிரபா கரன் குடும்பத்துக்கும் கதிர் குடும்பத் துக்குமிடையே இருக்கும் பந்தம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

பணம், அதிகாரம் என்று வரும்போது காவல்துறை, ரவுடிகளின் துணை கொண்ட நிழல் உலக வியாபாரிகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துவிடும் யதார்த்தத்தைத் திரைக்கதை துல்லிய மாகக் காட்டிவிடுகிறது. இந்தக் கூட்டணி யைத் தனிநபர்களால் எதிர்கொள் ளவே முடியாது என்பதை உணர்த்தி விடுவதில் படம் நிஜ உலகுக்கு நெருக்கமாக வந்து நிற்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் பொதுவாக நாயக பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் இடங்களில் துளியும் சமரசமின்றி யதார்த்தத்துக்கு அழுத்தம் கொடுப்பது பாராட்டத்தக்கது.

ஆனால், ஒதுங்கிப்போவது என்று தனிநபர் முடிவெடுத்தாலும் மற்றவர் கள் சும்மா விடுவார்களா என்ற கேள்வி யும் எழுகிறது. இந்த இடத்தில்தான் படம் பலவீனமாகத் தெரிகிறது. மிகைத் தன்மை அற்ற கிளைமாக்ஸ் துணிச்சலா னது. ஆனால் முழுமையானதல்ல.
துக்கிரித்தனமாக ஆட்டம்போடும் இளைஞர் பாத்திரத்தை முடிந்த அளவு நன்றாகக் கையாண்டிருக்கிறார் கதிர். தெனாவட்டான பேச்சு, காதல் குறும்பு, விடலைத்தனம், பொறுப்பான இன்ஃபார்மர், ரிஸ்க் எடுக்கும் இளமை வேகம் எனக் கச்சிதம் காட்டுகிறார்.

அவருடைய மனைவியாக வரும் ரேஷ்மி மேனன் அழகு. பெரிய வேலை யில்லை என்றபோதும் கிடைத்திருக் கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி யிருக்கிறார். வெளியே கிளம்பும் நேரத் தில் வீட்டில் இருக்கும் கணவனின் மனம் அறிந்து தாமதமாகச் செல்ல முடிவெடுக் கும் சமயத்தில் அவர் முகத்தில் மலரும் புன்சிரிப்பு அழகிய கவிதை.
யோகி பாபு/அப்புக்குட்டி வரும் காட்சிகள் கலகலப்புக்கு உத்திரவாத மளிக்கின்றன. சார்லி, தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் தன்மையை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார்.

கிருஷ்ணகுமாரின் இசை படத் தின் விறுவிறுப்புக்குத் துணை செய் கிறது. ஆனால் பாடல்கள் படத்துக்குப் பலம் சேர்க்கவில்லை. அருள் வின்சென் டின் ஒளிப்பதிவு காட்சிக்குத் தேவைப் படும் ஒளியையும் இருட்டையும் கோணத்தையும் தந்து நிறைவான உணர்வேற்படுத்துகிறது. காட்சிகளுக் கேற்ற வசனங்கள். வனிதா, தென்னரசு, மாரிமுத்து போன்றவர்களிடம் யதார்த்த நடிப்பு என படம் வழக்கமான படங்களிலிருந்து சிறிது தள்ளியே நிற்கிறது.

இயக்குநர் அனுசரண் முதல் படத்தில் தன் திறமையை நன்கு வெளிப் படுத்தியிருக்கிறார். அவரது முயற்சி யில் முழுமை கூடவில்லை என்றாலும், புதிதாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதை நேர்த்தியாகவும் வலு வாகவும் கையாண்டிருக்கும் அவரை நம்பிக்கை தரும் இளம் இயக்குநர் களில் ஒருவர் என்று தயங்காமல் சொல்லலாம்.

விமர்சனம்: தி ஹிந்து
   

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்: போலீஸ் அதிகாரிகள் சமரசம்!!

No comments :
பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதி கழிவுநீரை கொட்ட பொதுமக்கள் திடீர் எதிர்ப்பு தெரிவித்தனர். 
மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதி ராமநாதபுரம் நகராட்சியையொட்டி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்பட அரசின் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக பிரமுகர்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல்லை. இதையடுத்து ஊராட்சி தலைவர் சித்ரா மருது மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் இந்த ஊராட்சியின் கழிவுநீரை டேங்கர் லாரிகள் மூலம் எடுத்துச்சென்று நகராட்சி எல்லைக்கு உட்பட்ட நாகநாதபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் நீர்த்தேக்க தொட்டியில் கொட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல பட்டணம்காத்தான் ஊராட்சி பணியாளர்கள் கழிவுநீரை எடுத்துக்சென்று கழிவுநீர்த்தேக்க தொட்டியில் கொட்டச்சென்றனர். அப்போது நாகநாதபுரம், இந்திராநகர் பகுதி மக்கள் கழிவுநீரை இங்கே கொட்டக்கூடாது என்றும், சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் கூறி திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் தாசில்தார் தர்மர், உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ், நகரசபை உதவி பொறியாளர் சுப்பிரமணிபிரபு, என்ஜினியர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர் அரிதாஸ், பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது, துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று அந்த பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதுகுறித்து பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது கூறியதாவது:- 

பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டர் சிறப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த மாவட்டத்தை சுகாதாரமாகவும், குப்பைகள் இல்லாத மாவட்டமாகவும், நோய்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்கள் சுகாதாரமாக வாழ தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறார். 

கழிவுநீரை பொது இடங்களில் கொட்டினால் நோய் பரவும் என்பதற்காக நகராட்சி பகுதியான இந்திரா நகர், நாகநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீர் தேக்க தொட்டியில் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதி கழிவுநீரை கொட்ட அனுமதி வழங்கி உள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீர் வாகனங்களை கழிவுநீர்தேக்க தொட்டி அமைந்துள்ள வளாகத்திற்குள்ளே கொண்டு சென்று உடனுக்குடன் பம்ப் செய்து கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். .

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, September 26, 2015

குற்றம் கடிதல் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
எந்தக் கதாபாத்திரத்தையும் மையப் படுத்தாமல் ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை மையப் படுத்தும் படங்களின் வகையைச் சேர்ந்தது பிரம்மாவின் இயக்கத்தில் வந்துள்ள குற்றம் கடிதல்’. யதார்த்தத்தைச் சமரசம் செய்துகொள்ளாமல் விறுவிறுப்பாக இதைக் கையாண்டுள்ள பிரம்மாவின் முயற்சி பாராட்டத்தக்கது.

லாரியில் பயணம் செய்யும் அந்த இளம் ஜோடியின் முகத்தில் பெரும் கலவரம். குறிப்பாக அந்தப் பெண்ணின் முகத்தில். அதற்கான காரணத்தைச் சொல்வதாக விரிகிறது படம்.

தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை யாகப் பணியாற்றுபவர் மெர்லின் (ராதிகா பிரசித்தா). திருமண விடுப்பு முடிந்து பள்ளிக்குச் செல்கிறார். சக ஆசிரியையின் வேண்டுகோளை ஏற்று அவரது வகுப்பை கவனித்துக்கொள்ளச் செல்கிறார். அங்கே மெர்லின் செய்யும் ஒரு சிறு தவறு ஒரு பையனைக் கடுமை யாகப் பாதித்துவிடுகிறது. மெர்லினையும் பெரும் சிக்கலில் தள்ளி விடுகிறது.

அந்தப் பையன் என்னவானான்? ஆசிரியைக்கு என்ன நடக்கிறது? இந்த இருவரையும் சுற்றியிருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி அணுகு கிறார்கள்? பிரச்சினையின் வேர் எப்படிப் பார்க்கப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலாகப் பரபர வென்று நகர்ந்து செல்கிறது படம்.
ஒரு சம்பவம் அதனோடு சம்பந்தப் பட்டவர்களாலும், காவல் துறை, ஊடகம், பொதுமக்கள் ஆகியோராலும் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் காட்டி யிருக்கிறார் இயக்குநர். பார்வையாளர் களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் 
இச்சம்பவங்களையொட்டிப் பல தரப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு வரின் கோணமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

எல்லாருடைய பின்னணிகளும் முறையான பிரதிநிதித் துவம் பெறு கின்றன. அசம்பாவிதம் நிகழக் காரணமான ஆசிரியையின் உணர்வு, பள்ளி நிர்வாகத்தின் அணுகுமுறை, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய்மாமனின் கோபம், அம்மாவின் கையறு நிலை, என எல்லாமே அடர்த்தியானவை.
காட்சிகளால் கதை சொல்லும் கலை பிரம்மாவுக்குக் கைகூடியிருக்கிறது. பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் ஆசி ரியையின் கால் செருப்பில் ஒரு பிளாஸ்டிக் உறை ஒட்டிக்கொள்கிறது. அது தெரியா மல் அவர் நெடுந் தூரம் நடந்து வருவது அவரது பதற்றம் அவரை எந்த அள வுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டி விடுகிறது.

24 மணிநேரத்தில் நடக்கும் சம்பவங் களினூடே வேகமாக நகர்கிறது படம். வேகமான திரைக்கதை என்றாலும் பல்வேறு நுட்பங்களையும் தவறவிடாமல் பதிவுசெய்திருப்பது சிறப்பு. மனிதன் என்னதான் சூழ்நிலைக் கைதியானாலும், எல்லாருமே பதற்றத்தில் மனித நேயத் தைத் தொலைத்துவிட மாட்டார்கள் என் னும் உண்மையையும் படம் காட்டு கிறது. கோபத்தின் உச்சியில் இருக்கும் தாய்மாமன் பள்ளியின் முதல்வரைச் சொற்களால் வறுத்தெடுக்கிறார். அதற் குப் பதிலாக முதல்வரின் மனைவி சொல்லும் சில வார்த்தைகள் அவர் மனதைத் தொடுகின்றன. நாங்க விட்ற மாட்டோம் தம்பிஎன்று அந்த அம்மையார் மெய்யான உணர்வுடன் சொல்லும்போது தாய்மாமனின் மனம் நெகிழ்வதை உணர முடிகிறது. பாதிக்கப்பட்ட அன்னையை ஆசிரியை சந்திக்கும் இடம் அற்புதமான கவிதை. மனித இயல்பின் மகத்தான பரிமாணத்தை அழகாகக் காட்டும் காட்சிகள் இவை.

சிறுவனின் தாய்மாமன் பொது வுடமைச் சித்தாந்தம் பேசும் தோழராக வருவது யதார்த்தம். ஆனால் அரசியல் கோட்பாடு பேசப்படும் இடங்கள் இயல்பாக இல்லை. ஆசிரியையின் கிறிஸ்துவத் தாயார் தன் மகள் ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொண்டது குறித்துக் காட்டும் வெறுப்பும் நம்பும்படி இல்லை. பள்ளிக்கூடக் காட்சிகளும் பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியின் காலைநேரக் காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன.

பாலியல் கல்வி குறித்த விவாதம் தேவைக்கதிகமாக நீள்வதைத் தவிர்த் திருக்கலாம். ஊடகங்களின் போக்கைச் சொல்லும் காட்சிகள் கூர்மையாக இருந்தாலும் திரைக்கதையில் கச்சித மாக ஒட்டவில்லை. சில காட்சிகள் துருத்திக்கொண்டிருக்கின்றன. குறிப் பாகப் பையனின் தாய்மாமனின் சமூக உணர்வைக் காட்டுவதற்கான காட்சிகள்.

நடிகர்கள் தேர்வு திரைக்கதையின் நம்பகத்தன்மைக்குப் பெரிதும் உதவி யிருக்கிறது. பாத்திரங்கள் நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லாருமே புதுமுகங்கள். ஒவ்வொரு நடிகரையும் கதாபாத்திரமாகவே மாற வைத்திருப்பதில் இயக்குநரின் ஈடுபாடும் உழைப்பும் தெரிகின்றன. ராதிகா பிரசித்தா வின் நடிப்பு அபாரம். குற்றவுணர்வும் பீதியும் பதைபதைப்பும் அவர் முகத்தில் தத்ரூபமாகப் பிரதிபலிக்கின்றன. பல சமயம் அவர் கண்களே எல்லாவற்றையும் சொல்லி விடுகின்றன.

சங்கர் ரங்கராஜனின் இசையில் பாடல் கள் இனிமையாக உள்ளன. பின்னணி இசை திரைக்கதையின் ஆழத்தைக் கூட்டுகிறது. மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்துக்கு இயல்புத் தன்மையைத் தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியேபாடலைப் படமாக்கிய விதம் அற்புதம். கன்னத்தில் முத்தமிட்டால்என்னும் வரியைக் காட்சிப்படுத்திய விதமும், அடுத்த வரியைப் பாடாமல் இசையால் இடைவெளியை நிரப்பிய விதமும் படத்தின் அடிநாதத்துக்கு பொருத்தமாய் அமைந்து மனதை நெகிழச் செய்கின்றன.

சி.எஸ். பிரேமின் படத்தொகுப்பு அருமை. லாட்ஜுக்கு அருகே நடக்கும் கட்டைக் கூத்து கதாபாத்திரத்தின் நிலையைப் பிரதிபலிக்கிறது. ஆனால் இந்தப் பொருத்தத்தை நீட்டிமுழக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் எடிட்டர். கடைசிக் காட்சியில் தோழர் உதயன் ஊடகத்திடம் பேசுவார் என்று எதிர்பார்க்கிறபோது அவர் கேமராவைக் கையால் மறைத்துத் திரையில் கருப்பு வண்ணைத்தை படரவிடுவதோடு காட்சியை முடித்துக்கொள்கிறார் எடிட்டர். இப்படித்தான் பல காட்சிகளில் எடிட்டிங் கூர்மையாக இருக்கிறது.

ஒரு சம்பவத்தை முன்வைத்துச் சமூக யதார்த்தத்தையும் மனித இயல்பு களையும் அழுத்தமாகக் காட்டியிருக்கும் குற்றம் கடிதல்தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவு. மனித மனம், பழிவாங்க மட்டுமல்ல; மன்னிக்கவும் தயாராக இருக்கும் என்னும் உண்மையைக் கவித்துவமாகக் கூறும் ஆரோக்கியமான படம் இது.


விமர்சனம்: ஹிந்து 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில், வியாழக்கிழமை இரவு லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழப்பு, லாரி ஓட்டுநர் கைது!!

No comments :
கீழக்கரை அருகே ஏர்வாடி கிழக்குக் கடற்கரைச் சாலையில், வியாழக்கிழமை இரவு லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சேலம் வீரபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (24). 

இவர், ராமநாதபுரம் நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளார். அந்தக் காரில் 14 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, ஏர்வாடி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள குடியிருப்பு அருகே லாரி மீது கார் மோதியது. இதில், கார் ஓட்டுநர் பிரதீப்குமார் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இதில் பலத்த காயமடைந்த பிரதீப்குமாரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.  

இது குறித்து, வாலிநோக்கம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்த கப்படையார் மகன் ரகுமத் அலி அளித்த புகாரின்பேரில், ஏர்வாடி காவல் ஆய்வாளர் பால்பாண்டி, சார்பு-ஆய்வாளர் ராஜன் ஆகியோர் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் காரைக்காலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சுவாமிநாதன் (47) என்பவரைக் கைது செய்து,  விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பனைக்குளத்தில் தங்கையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.35.70 லட்சம் திருடிய சகோதரர் தலைமறைவு!!

No comments :

பனைக்குளத்தில் தங்கையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 35.70 லட்சத்தை திருடிய அண்ணனை, போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே புதுவலசை கிராமத்தில் கிழக்குத் தெருவில் வசிப்பவர் இப்ராகிம் ஷா என்பவரின் மனைவி பாத்திமா ரிஸ்வானா செய்யது. இவரது மூத்த சகோதரர் நல்ல இப்ராஹிமும் அதே பகுதியில் வசித்து வருகிறார். 

பாத்திமா ரிஸ்வானா பனைக்குளத்தில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கிக் கணக்கிலிருந்து பாத்திமா ரிஸ்வானாவுக்கு தெரியாமல் ரூ.35 லட்சத்து 70 ஆயிரத்தை நல்ல இப்ராஹிம் கடந்த 3.1.2014 ஆம் தேதி எடுத்துள்ளார்.

இதையறிந்த ரிஸ்வானா, தனது சகோதரரிடம் பலமுறை அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டும் அவர் தரவில்லையாம். இதனால், ரிஸ்வானா ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின்பேரில்,  ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். நல்ல இப்ராஹிம் தலைமறைவானதை அடுத்து, அவரைத் தேடி வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தீபாவளியை முன்னிட்டு ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவிகித சிறப்புத் தள்ளுபடி விற்பனை!!

No comments :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,  ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவிகித சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் 30 சதவிகித சிறப்புத் தள்ளுபடி வழங்கி வருகிறது.    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணங்களில், பலவித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டுச் சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஜீன்ஸ், டாப்ஸ், குர்தா வேட்டி, சேலைகள், சுடிதார் மற்றும் வெண்பட்டு சேலைகள் ஆகியன தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும், இயற்கையான ஆர்கானிக் புடவை ரகங்களும் வந்துள்ளன. பாரம்பரிய முறையில் கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்குடி சேலைகள் ஆகியனவும் விற்பனைக்கு உள்ளன.   தொடர்ந்து, ஆண்களுக்கு ஏற்ற லினன் சட்டைகள், பருத்தி சட்டைகள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வந்துள்ளன.   கடந்த ஆண்டு ரூ. 143.68 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. நடப்பு ஆண்டில் ரூ. 92 லட்சமும், அடுத்த ஆண்டில் ரூ. 1.73 கோடியும் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டுக்கான சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.


விழாவுக்கு, கோ-ஆப்டெக்ஸ் மதுரை மண்டல மேலாளர் ரஞ்சனி, முதுநிலை மேலாளர் கோ. அன்பழகன், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், டி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   ஏற்பாடுகளை, உதவி விற்பனையாளர் கே. பாண்டியம்மாள் செய்திருந்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரையில் சொந்த வீடு கேட்டு மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது வழக்கு!!

No comments :
கீழக்கரையில் சொந்த வீடு கேட்டு மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மீது, போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கீழக்கரை கஸ்டம்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது மகள் அப்ரோஸ் சஜானா (25). இவருக்கும், கீழக்கரையைச் சேர்ந்த ரிபாக் அகமது என்பவருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள், தற்போது ராமநாதபுரம் விவேகானந்தர் தெருவில் வசித்து வருகிறார். திருமணமாகி 40 நாள்கள் மட்டுமே ஆன நிலையில், ரிபாக் அகமது வெளிநாடு சென்றுவிட்டாராம். அதன்பின்னர், மனைவியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். 

இது குறித்து கேட்டதற்கு, சேர்ந்து வாழ விரும்பினால் சொந்தமாக வீடு எழுதி வாங்கி வருமாறு ரிபாக் அகமது தெரிவித்தாராம்.

இதற்கு, அவரது தாய் சல்கத் சபிக்கா, இஸ்ரா அகமது மற்றும் உறவினர்கள் அம்சத் நிகியா, நூகு, சபர் பாத்திமா, லத்திபா, மக்சதீன் ஆகியோரும் உடந்தையாக இருந்தனராம். இதனால், மனம் உடைந்த அப்ரோஸ் சஜானா கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)